நடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்..! உண்மையில் நடந்தது என்ன? படத்தின் இயக்குனர் விளக்கம்..!

0
295
Actorarjun

கடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்றழைக்கபடும் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் ஒன்றை கூறியிருந்தார்.

இயக்குனர் அருண் வைத்தியநாதன்:

Arun vaidiyanathan

நிபுணன் படத்தின் ஒரு காட்சியின் போது நடிகர் அர்ஜுன் நெருக்கமான காட்சிகளை இயக்குனரிடம் வேண்டும் என்றே கேட்டு வாங்கினார் என்றும் அந்த காட்சியில் வேணுமென்றே தனது பின் பாகத்தை தடவினார் என்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டி இருந்தார்.

ஆனால், தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் எந்த வித கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றசாட்டு பலராலும் நம்ப முடியாமல் தான் இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து “நிபுணன்” படத்தின் இயக்குனர் அரவிந்த் வைத்தியநாதன் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஜுன் குறித்து பேசியுள்ள அவர்,அர்ஜுன் மற்றும் ஸ்ருதி இருவரும் என்னுடைய சிறந்த நண்பரகள். அவர்களது குடும்ப நபர்களையும் எனக்கு நன்றாக தெரியும். அர்ஜுன் சார் மிகவும் நல்ல மனிதர். அவர் ஒருஜென்டில் மேன்.

அவர் ,மீது இதுபோன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை.படத்தில் நெருக்கமான காட்சி இருந்தது உண்மை தான். ஆனால், உண்மையில் முதலில் அதைவிட நெருக்கமான கட்சியை நான் அமைத்திருந்தேன். அதற்கு அர்ஜுன் சார் என்னிடம்’எனக்கு மகள்கள் இருக்கிறது அதனால் இதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் நானே நெருக்கமான காட்சியை குறைத்துக்கொண்டேன். இது தான் உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.