இந்து மரபுகளுக்கு புத்துயிர் அளித்ததற்காக இந்தியாவில் துன்புறுத்தப்பட்டார் – நித்தி சார்பாக ஐநாவில் பேசி பெண். யார் இவர் ?

0
357
- Advertisement -

ஐநா கூட்டத்தில் கைலாசாவின் பிரதிநிதி கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. போலி சாமியார் நித்தியானந்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன் என்று சொல்லலாம். இந்து மத போதனைகளை போதிப்பவர் என்று கூறி பல பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் ஆசிரமங்கள் உள்ளன. அதோடு உலக அளவில் இவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இருந்தாலும், நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றது. போதை பொருள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து இருக்கிறது. மேலும், மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. அதோடு இவர் தனியாக தனக்கென ஒரு தீவை உருவாக்கி கைலாசம் என்று பெயர் வைத்து இருக்கிறார். இந்துகளுக்கு என்று கைலாச எனும் ஒரு தனி நாடு ஒன்றை உருவாக்கி விட்டதாக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நித்தியானந்தா வெளியிட்டிருந்தார். இது குறித்த கருத்து எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

கைலாச தீவு குறித்த தகவல்:

கைலாச நாடு என்பது சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுவதும் வாழும் இந்துக்களுக்கான நாடு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்பே சொற்பொழிவு காணொளியில் கைலாசவிற்கு எப்படி வரவேண்டும் என்ற தகவலை நித்தியானந்தா வெளியிட்டு இருந்தார். அதில் அவர், கைலாசவிற்கு வர முதலில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வரவேண்டும். அங்கிருந்து கைலாசவிற்கு வர கைலாஷ்க்கு சொந்தமான பல தனியார் விமான சேவைகள் இருக்கின்றது. அங்கிருந்து கைலாசவிற்கு அழைத்து வர படுவீர்கள் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஐநா கூடத்தில் கைலாச உறுப்பினர்கள்:

இப்படி ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள், எல்லை, அரசாங்கம், இறையாண்மை அடிப்படையில் மற்ற அரசுகளுடன் உறவுகளையும் பராமரிக்கும் தன்மை என நான்கு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் கைலாசாவிற்கான குடியுரிமைக்காக ஐநா கூட்டத்தில் கைலாச உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் நித்தியானந்தா குறித்தும் அவருடைய கைலாச நாடு குறித்தும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

கைலாசம் குடியுரிமை:

இதை உறுதி செய்யும் விதமாக ஐநாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான கமிட்டியின் கூட்டம் ஒன்றில் கைலாசாவின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட புகைப்படங்களை கைலாசா என்ற டீவ்ட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கைலாசவை ஐநா அங்கீகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐநாவின் பொருளாதார சமூகம் மற்றும் கலாச்சார உரிமைக்கான கமிட்டியின் கூட்டம் குறித்து ஐநாவின் அதிகாரப்பூர்வ காணொளியில் கைலாசவின் பிரதிநிதி ஒருவர் பேசி இருக்கிறார்.

கைலாசவின் பிரதிநிதி கூறியது:

அதில் அவர் கூறியிருப்பது, நான் இங்கு கைலாசவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்கிறேன். நான் ஐநாவுக்கான நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்தியானந்தா. கைலாசா என்பது இந்துக்களக்கான முதல் இறையாண்மை நாடு. இந்துக்களின் உரிய தலைவர் நித்தியானந்தா. இவரால் தான் கைலாசம் நிறுவப்பட்டது. இந்து மதத்தின் பழமையான பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்காக தான் நித்தியானந்தா இந்தியாவில் பல துன்புறுத்தல்களை அனுபவித்தும் வருகிறார். அவர் போதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தான் பிறந்த நாட்டில் இருந்தும் அவர் நாடு கடத்தப்பட்டு இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement