வெறும் 5 நிமிடத்தில் என்னை பார்த்து ஓகே சொல்லிவிட்டார் – நிவேதா பெத்துராஜ் கலகல பேச்சு

0
1356

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் டிக் டிக் டிக். வழக்கமான படமாக இல்லாமல், இது விண்வெளியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

Actress Nivetha Pethurajசமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாக சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை பல 5 மில்லியன் வியூஸ் மற்றும் 1,50,000+ லைக்ஸ் பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். படம் இந்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்கலாமே:
விஜய் 62 படத்தில் இணைந்தார் மற்றொரு பிரபலம்

இந்த விழாவில் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ், இந்த படத்தின் இயக்குனர் சக்தி என்னை ஒரே ஒரு தடவை தான் பார்த்தார். மொத்தமாக என்னை ஒரு 5 நிமிடம் பார்த்திருப்பார் அவ்வளவு தான் உடனே இந்த படத்தில் நடிக்க எனக்கு ஓகே சொல்லிவிட்டார். அதற்காகவே நான் கஷ்டப்பட்டு நடித்தேன். ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் மிகக் கடிமாக இருந்தது. அவர்கள் என்மேல் வைத்த அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என நினைக்கிறேன் எனக் கூறினார் நிவேதா.