இந்த திட்டத்தை பயன்படுத்தினால் மட்டுமே வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியும் – நாசர் அதிரடி!

0
1510
naasar
- Advertisement -

நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரின் வீடு அமைந்துள்ள காமகோடி நகரும் ஒவ்வொரு கன மழையிலும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த மழை குறித்து அவரிடம் பேசினோம். “கடந்த 2015-ம் ஆண்டு மழையில் ஏரிகள் உடைப்பெடுத்தபோது நாம் கதிகலங்கிப் போனோம்.
Naasar ஆனால், அந்த மழையிலிருந்து நாம் பாடம் கற்கவில்லை என்பதையே இந்த மழை நாள்கள் உணர்த்துகின்றன” என்கிறார் நாசர்.
2015-ஆண்டு ஏரிகள் உடைந்து கூவத்தில் பாய்ந்தோடிய வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தபோது எல்லோரும் பாதிக்கப்பட்டோம். அப்போது, அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காமல் நாமே களத்தில் இறங்கி முதியவர்களையும், குழந்தைகளையும் காப்பாற்றினோம்.

-விளம்பரம்-

அதன்பின் அந்தத் துயரச் சம்பவத்தையே ஏனோ மறந்து போனோம். மீண்டும் வெள்ளம் வந்தால் என்ன செய்வது என்கிற சிந்தனையில்லை. இதோ இப்போது நான்கு நாள்கள் பெய்த மழையிலேயே அல்லாடிக்கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

சென்னைப் பள்ளிக்கரணயில் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் முதியவர் ஒருவர் ஒரு டிவி சேனலில், ‘நான் 1993ல் வீடுகட்டி இங்கே குடிவந்தேன். 2015 வரை வெள்ளம் என்ற ஒன்று வந்ததே இல்லை. கடந்த 2015-ஆண்டும் இப்போதும் மழை பெய்யும்போதும்தான் வெள்ளம் வந்துவிட்டது.
chennai floodஇது எல்லாவற்றுக்குமே முக்கியக் காரணம் அருகில் இருந்த கால்வாயை அடைத்து விட்டனர், அதனால் மழை தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தங்கி வீட்டுக்குள் நுழைந்து விட்டது” என்று கதறுவதைப் பார்த்து நான் கலங்கிப்போனேன்.

30 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் என்பதையே சென்னை பார்த்தது இல்லை. எப்போதாவது அதிகமாக மழை பெய்யும், பின்னர் வடிந்துவிடும். வருடா வருடம் புயல் மையம் கொள்ளும்.
chennai floodஅதுவும் எப்போதாவதுதான் சென்னையைத் தாக்கும். பலமுறை கரை கடந்து ஆந்திரா சென்றுவிடும். இதுதான் இங்கு வழக்கமாக நடந்திருக்கிறது. எப்போது வெள்ளைக்காரன் வடிவமைத்துக்கொடுத்த வடிகால் திட்டத்தைக் கடைபிடிக்காமல் கைவிட்டோமோ அப்போதே நம்மை இந்த அரசு மழைக்குத் தத்துக்கொடுத்துவிட்டது. அந்த வடிகால் வாய்க்காலை முறையாகப் பராமரித்திருந்தால் இந்தப் பிரச்னையே இருந்திருக்காது.

-விளம்பரம்-
Advertisement