தளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா..? பிரபல நாளிதழ் வெளியிட்ட தகவல்.! குஷியில் ரசிகர்கள்

0
854
vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் இளைய தளபதி விஜய் கூட்டணி 3 வது முறையாக இணைந்து ஒரு படத்தை எடுத்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இந்த படத்தின் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தை “விஜய் 62” என்று தான் அழைத்து வருகின்றனர்.

vijay-62

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வரலக்ஷ்மி, ராதாரவி யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். விஜயின் 62 வது படமான இந்த படத்தின் தலைப்பு என்னவென்று இதுவரை வெளியாகததால் ரசிகர்கள் இந்த படத்தை “விஜய் 62”, “தளபதி 62” என்று தான் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு “கோடரி ” என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்று பிரபல நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தலைப்பு “விஜய் 62” படத்தின் படக்குழுவினர் வைக்கவில்லை என்றாலும், கோடாரி என்ற தலைப்பு நன்றாக தான் இருக்கின்றது என்று விஜய் ரசிகர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

vijay actor

அடுத்த ஜூன் 22 தேதி தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எப்போதும் விஜய் பிறந்த நாள் அன்று அவர் நடிக்கும் படத்தின் விளம்பரங்களோ, போஸ்டர்களோ கண்டிப்பாக வெளியாகும். எனவே, அடுத்த மாதம் இந்த படத்தின் தலைப்பு என்னவென்று வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisement