OPS-ன் நேற்றைய காஞ்சிபுரம் புரட்சி பயணத்தின் பொதுக்கூட்டத்தில் எதிர்பார்க்காத இயற்க்கை கொடுத்த ட்விஸ்ட். தேதியை மாற்றிய OPS தரப்பு.

0
627
- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு மேலும் மேலும் சிக்கல் போல நேற்று நடத்த இருந்த மாநாடு மற்றொரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அதிமுக கட்சியில் இருந்து ஒ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால் அவருக்கு மேலும் சிக்கலானது. மேலும் ஒ.பன்னீர் செல்வம் மீது நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கானது நிலுவையில் உள்ளது.

-விளம்பரம்-

மேலும் அவரது மகன் ஒ.பி.ரவீந்திரநாத் மீது ஒரு பெண்மணி பாலியல் தொல்லை வழக்கு ஒன்றை அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து எடப்பாடியின் மதுரை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை அடுத்து ஒ.பன்னீர் செல்வம் அவர் அணியும் ஒரு பிரமாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அரசியலில் என்ன செய்வத்னென்று அறியாமல் தவித்து வருகிறார் என அரசியல் வட்டரங்கள் பேசி வருகிறது.     

- Advertisement -

பலம் கட்டிய EPS:

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்  மாவட்டங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன. மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்ள காஞ்சிபுரத்தில் புரட்சி பயணம் என்னும் மாநாட்டினை நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அதற்க்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரட்டை குழல் துப்பாக்கிகள் என வர்ணிக்கப்பட்ட ஒ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்காக தனி தனி மாநாட்டினை ஏற்பாடு செய்து வருகின்றன.

-விளம்பரம்-

ரத்தான மாநாடு:

கட்சியல் இருந்து தான் நீக்கபட்டதுக்கு பிறகு மாவட்டம் மாவட்டமாக சென்று பொதுமக்களையும் தன்னுடைய ஆதரவளர்களையும் சந்தித்து வருகிறார். இதன் துவக்கமாகவே காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து இருந்தார். இந்த கூட்டத்திற்கு புரட்சி பயணம் என்று பெயர் சூட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெறவிருந்த இந்த பொதுக் கூட்டமானது மழையின் காரணமாக திடிரென்று நிறுத்தப்பட்டது.

பொதுக்கூட்டம் ரத்து செய்ய பட்ட நிலையில் மீண்டும் ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஒ.பன்னீர் செல்வத்தின் அணியில் இடம் பெற்று இருக்கும் பண்ரூட்டி இராமச்சந்திரன் தெரிவித்து இருந்தார். பொதுகூட்டத்திற்கு வந்த அவரது ஆதரவாளர்கள் மழையில் நனைந்த படியே அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனால் ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.        

Advertisement