டைம் ட்ராவல், விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் சில்க் – குஷியில் ஆழ்ந்த ரசிகர்கள்.

0
778
Silk
- Advertisement -

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலரில் சில்க் ஸ்மிதா வரும் காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

-விளம்பரம்-

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார்.

ட்ரெய்லர் வீடியோ:

இவர்களுடன் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தினுடைய இன்று ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடி இருக்கிறது. டைம் டிராவல், ஆக்சன், திரில்லர், கேங்ஸ்டர் போன்ற பலவித ஜர்னலில் இந்த படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சில்க் சுமிதா காட்சி:

இந்த நிலையில் ட்ரைலரில் ஒரு காட்சியில் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா இடம்பெற்றிருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உண்மையாலுமே சில்க் ஸ்மிதாவுடைய காட்சிகளை படத்தில் காண்பித்து இருக்கிறார்களா? இல்லை சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கும் பெண்ணை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆக, மொத்தம் பல வருடங்களுக்கு பிறகு சில்க்கை திரையில் பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சில்க் சுமிதா குறித்த தகவல்:

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு வசீகரமான முகம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். இவர் சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

Advertisement