குண்டாக மாறிய ஒஸ்தி பட நடிகை ! புகைப்படம் உள்ளே !

0
1370
Osthi movie

2013 இல் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய்.அந்த படத்திற்கு பின்னர் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார்.

richa-gangopadhyay

1986 இல் டெல்லியில் பிறந்த இவர் 2010 இல் தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.முதலில் மாடலிங் துறையில் இருந்த இவர் 2007 இல் அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பட்டத்தை வென்றவர்.தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள ரிச்சா தெலுங்கில் 7 படங்களில் நடித்துள்ளார்.

இவர் அறிமுகமான லீடர் படத்தில் நடித்த போது அந்த படம் எடுப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே இவரை தேர்வு செய்திருந்தனர்.சினிமாவில் நடிப்பதற்கு முன்பு அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் ஒரு தொடரில் தொகுப்பாளராக 4 வருடங்கள் பணியாற்றி வந்தார்.படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரிச்சா 2013 இல் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம். பி. ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.தற்போது தனது படிப்பின் மீது மட்டும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார் ரிச்சா.