பிக் பாஸ் தமிழின் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ஆரம்பம் ஆக உள்ளது. ஆனால் இன்று வரை பிக் பாஸ் குயின் ஓவியாவிற்கு மவுஸ் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவருக்கு அழைப்பு வந்துவிடுகிறது.தமிழகத்தில் நடக்கும் பல கல்லூரி நிகழ்ச்சி, அனைத்து திரை உலக நிகழ்ச்சி என அனைத்திற்கும் ஓவியாவிற்கு அழைப்பு வந்துவிடுகிறது. இப்படி ஒவ்வொரு மேடைக்கு சென்று ஒவ்வொரு விதமாக பேசி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று அங்கு ரசிகர் ஒருவருக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் சதீசுக்கு முத்தம் கொடுத்தார்.
தற்போது அதே நிகழ்ச்சியில் ஒரு சொதப்பல் வேலையை செய்துள்ளார், மேடைக்கு விருது வழங்க சென்று மேடையில் நின்று பேசும் போது..உடன் இருந்த தேவி ஸ்ரீ பிரசாத்தின் பெயரை கூறும் போது, DSPயின் பெயரை கூறுவதற்கு SBP என கூறிவிட்டார்.
அதாவது, SSB சார் உங்களுடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். இதனை கேட்டவுடன் அரங்கமே சிரித்தது. உடனே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சதீஷ், அது SSB இல்லை, DSP எனக் கூறி அவரும் சிரித்தார்.