ஐஸ்வர்யா குறித்து ஓவியா போட்ட டுவீட்..! கடுப்பான ரித்விகா ரசிகர்கள்..!

0
207

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கரவர்ந்தவர் நடிகை ஓவியா தான். தனது உண்மையான குணத்தாலும், குறும்புத்தனமான செயல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கினார் ஓவியா. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போதும் ஓவியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அதே போல சீசன் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யார் அடுத்த ஓவியா என்ற பேச்சும் நிலவி வந்தது. ஆனால், ஓவியா போல யாரும் வரமுடியாது என்று பலரும் குறிப்பிட்டு வந்தனர்.

ஆனால், தற்போது ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் ஓவியா என்ற பெயரை பெற்று விடலாம் என்று செய்து வரும் சில செயல்கள் தான் ரசிகர்களை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது. அதே போல இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபட வேண்டும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் சமீபத்தில் ஓவியா போட்டுள்ள ஒரு ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாதத்தா என்று மட்டும் ட்வீட் செய்திருந்தார். இதனை கண்ட ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா, ஐஸ்வர்யா தாத்தாவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் எனவே எங்கள் ஒட்டு இந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு என்று தான் என்று ரி- ட்வீட் செய்து வருகின்றனர்.

உண்மையில் ஓவியா எதற்காக ஐஸ்வர்யாதத்தா பெயரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் என்பது தெரியவில்லை. அதற்குள்ளாகவே ஓவியா, ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை சீசன் 2 போட்டியாளர்கள் யாரின் பெயரை பற்றியும் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிடாத ஓவியா தற்போது ஐஸ்வர்யாவின் பெயரை குறிப்பிட்டுள்ளது, ஒருவேளை ஓவியாவின் ஆதரவு ஐஸ்வர்யாவிற்கு தானோ என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.