சந்திரமுகி படத்தில் முதலில் இந்த இரண்டு நடிகைகள் தான் நடிக்க இருந்ததாம் ! புகைப்படம் உள்ளே !

0
4516
- Advertisement -

இன்று பல கதாநாயகிகள் உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்க முந்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய டாப் ஸ்டார்ஸ் இவரது தேதிகளுக்காகக் காத்திருந்த கதைகள் உண்டு; இவர் இல்லாததால் படங்களைக் கைவிட்ட நிஜமும் உண்டு. இவ்வளவு பெரிய ஆதர்சம் பெற்றவர் நடிகை, சௌந்தர்யா. நேற்று (17-04-2018) அவருடைய நினைவு நாள்.

-விளம்பரம்-

chandramukhi

- Advertisement -

டாக்டர் ஆகும் தன் கனவு நனவாகாதபோதிலும், சினிமாவில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டார், செளந்தர்யா. இவருக்கு சினிமாவில் இயக்குநர் ஆகும் எண்ணமும் இருந்தது.

ஏப்ரல் 17-ம் தேதினு நினைக்கிறேன். ஒரு மதியநேரம், `சந்திரமுகி’ எடுக்கலாம்னு சிவாஜி ப்ரொடக்‌ஷன்ல நான் பேசிட்டு இருந்தேன். பிரபுவோட அண்ணன் ராம்குமார்கிட்ட சௌந்தர்யா அனுப்புன மெசெஜைக் காட்டி, சௌந்தர்யாதான் இந்தப் படத்தோட ஹீரோயின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போதான், என் போன் ரிங் அடிச்சது. யாருனு எடுத்துப் பார்த்தா, கன்னடத்துல செளந்தர்யாகூட நடிச்ச ஒரு நடிகை பேசுனாங்க. போன்ல அவங்க, `சார் சௌந்தர்யா மேடம் ஹெலிகாப்டர் வெடிச்சு இறந்துட்டாங்க!’னு சொன்னதும் எனக்குப் பெரும் அதிர்ச்சி. என்ன பண்றதுனு தெரியலை. ராம்கிட்ட `நான் வீட்டுக்குக் கிளம்புறேன்’னு வந்துட்டேன்!.

-விளம்பரம்-

simran

Soundarya

soundharya

பிறகு, தமிழ்ல `சந்திரமுகி’ எடுக்கும்போது, படத்துல சிம்ரன் நடிக்கிறதா இருந்து, பிறகுதான் ஜோதிகா நடிச்சாங்க. படத்தை முழுசா பார்த்த ஜோதிகா, `தாங்க்ஸ் டூ சிம்ரன்’னு சொன்னாங்க. `நீங்க சௌந்தர்யாவுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும்’னு சொன்னேன். அந்தப் `பொன்னுமணி’ படத்துல வர்ற சௌந்தர்யாவோட சிரிப்பு எனக்கு இன்னைக்கும் வரைக்கும் ஞாபகத்துல இருக்கு. அவங்களை மறக்குறது ரொம்பவே கஷ்டம்!” என கனத்த இதயத்தோடு விடைபெற்றார், இயக்குநர் வாசு.

Advertisement