தன்பாலின திருமணம் குறித்து பா ரஞ்சித் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தன்பாலின ஈர்ப்பு குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பலருமே பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும், தன்பாலின திருமணத்திற்கு பல நாடுகளில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை.
இதனால் தன்பாலின திருமணத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள், திருமணம் என்பது அரசியல் சாசனத்தின்படி அடிப்படை உரிமை இல்லை. தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. மேலும், ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம் போன்றவை தொடர்பான உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிந்துரைக்க சொல்கிறது.
தன்பாலின திருமணம் குறித்த தகவல்:
அவர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கவும் மத்திய அரசுக்கு கூறப்படுகிறது. சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த எதிர்ப்பு செல்லுபடியாகாது. LGBTQ+ சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைய சட்டம் வேண்டும்.
திருநர்கள் மற்றும் இடைப்பாலின நபர்கள் ஏற்கெனவே உள்ள சட்டங்களின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி இருக்கிறது.
பா. ரஞ்சித் பேட்டி:
தற்போது இதற்கு பலருமே தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பேட்டியில் இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் கூறியிருப்பது, உலகில் பல நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் இல்லை. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தன்பாலின உறவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்.
தங்கலான் படம்:
தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி, என பலர் நடித்து இருக்கின்றார்கள்.
படம் குறித்த தகவல்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப் குறித்த கதையை என்று பா.ரஞ்சித் கூறியிருந்தார்.இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் படப்பிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இன்னும் சில நாட்களில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று பேட்டியில் பா.ரஞ்சித் கூறி இருக்கிறார்.