“ஒரு அம்பேத்கரியராக குரல் எழுப்பி வருபவர்” – பா. ரஞ்சித் கண்டனம்

0
1531
- Advertisement -

உத்திர பிரதேசத்தின் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சுடுதல் தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்திரபிரதேசத்தில் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்பியின் தலைவராக இருப்பவர் சந்திரசேகர். இவர் நேற்று தன்னுடைய கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பின் இவர் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது தியோபந்த் என்ற பகுதியில் சந்திரசேகர் காரில் வந்து இருக்கிறார். அந்த காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். அந்த காரின் பதிவு எண் அரியானா மாநிலத்தின் பதிவு எண்ணாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு குண்டு ஆசாத்தின் வயிற்றில் துளைத்து இருக்கிறது. மீதி குண்டுகள் காரின் கதவில் பாய்ந்திருக்கிறது.

- Advertisement -

சந்திரசேகர் ஆசாத் மீது தாக்குதல்:

உடனடியாக இந்த துப்பாக்கி சுடுதல் நடத்தியதை சுதாரித்துக் கொண்ட ஆசாத்தின் ஓட்டுனர் புத்திசாலித்தனமாக காரை திருப்பி இருக்கிறார். பின், மர்ம கும்பல் அந்த இடத்திலிருந்து தங்கள் வந்த காரிலேயே தப்பி சென்றார்கள். இதை அடுத்து ஆசாத் அவர்கள் தியோபந்தியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து இருக்கிறார். பின் ,மேல் சிகிச்சைக்காக தற்போது இவர் சஹாரன்பூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

சந்திரசேகர் ஆசாத் உடல்நிலை:

தற்போது ஆசாத் அபாய கட்டத்தை தாண்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆசாத்தின் மீது தாக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், இந்த தாக்குதலை கண்டித்து பீம் ஆர்மி, உத்திர பிரதேஷ் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்ற பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பா ரஞ்சித் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பா. ரஞ்சித் டீவ்ட்:

அதில் அவர் “பட்டப் பகலில் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது சாதியக் குற்றச் செயலாகும். ஒரு அம்பேத்கரியராக, பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சாதி அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருபவர் ஆசாத். ஒரு பட்டியலின அரசியல் பிரமுகராக, ஆசாத் தோட்டாக்களுக்கு ஆளாகியிருப்பது, மாநிலத்தில் நிலவி வரும் சாதிவெறி மற்றும் சட்டம் ஒழுங்கு தோல்வியின் அடிப்படைப் பிரச்சனையை அம்பலப்படுத்துகிறது.

பா. ரஞ்சித் குறித்த தகவல்:

அம்மாநில முதல்வர் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த வேண்டும். சாதி வெறியர்களைக் கைது செய்யக் கோருகிறேன் மற்றும் என் சகோதரர் ஆசாத் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் பா. ரஞ்சித். இவர் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement