தோற்றுப் போன குணசேகரன், ஜனனி கொடுத்த ஷாக்,கதிருக்கு விழுந்த அடி – எதிர்நீச்சல் லேட்டஸ்ட் அப்டேட்.

0
1675
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த புதிய அப்டேட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

-விளம்பரம்-

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் சில மாதங்களாகவே ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். தற்போது சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. அருண் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். இதனால் ஜனனியும், ஆதிரையின் அம்மா, வீட்டின் மற்ற மருமகள்களும் என்ன செய்வது என்றும் புரியாமல் வேதனையில் இருக்கிறார்கள்.

சீரியலின் கதை:

ஆனால், ஆதி குணசேகரன் ஜெயித்து விட்டோம் என்ற திமிரில் இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்து அவர் எல்லோரையும் சராமாறியாக பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் எல்லோரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். ஆனால், ஜனனி மட்டும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜனனி, உண்மையில் நீங்கள்தான் தோத்து போனீர்கள். ஒரு தங்கையின் வாழ்க்கை அழித்து நீங்கள் தான் தோத்து விட்டீர்கள் என்று கோபமாக பேச கதிர், ஜனனி இடம் சண்டை போட வருகிறார்.

-விளம்பரம்-

குணசேகரன்-ஜனனி சண்டை:

உடனே குணசேகரன் ஜனனி-சக்தி இந்த வீட்டில் இருக்க தேவை இல்லை என்று கூறுகிறார். இந்த நிலையில் இன்று என்ன நடக்கும் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், ஜனனி சக்தி இடம் இனிமேல் நாம் இங்கு இருப்பதற்கு எந்த அவசியமில்லை போகலாம் என்று சொல்கிறார். இதனால் ரேணுகாவும் நந்தினியும் நாம் எதற்கு இந்த வீட்டில் இருக்கணும் நாமும் வெளியே போகலாம் என்று சொல்கிறார்கள். உடனே குணசேகரன் எல்லோரும் இந்த வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கோபமாக பேசுகிறார்.

இன்றைய எபிசோட் ப்ரோமோ:

இன்னொரு பக்கம் ஆதி குணசேகரனின் வக்கீல், இந்த பட்டம்மாள் பாட்டியின் 40% சேருக்கும் இந்த வீட்டு மருமகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூறியவுடன் அவர்களை இப்பதான் நான் வீட்டை விட்டு துரத்தி விட்டேன் என்று ஆதி குணசேகரன் சொல்கிறார். உடனே அவர், எதற்கு அவசரப்பட்டு இருக்கிறார்கள் என்று கேட்கிறார். இதனை அடுத்து ஆதி குணசேகரன் அனைத்து மருமகளையும் வீட்டிற்கு அழைத்து வருவாரா? ஆதிரையின் நிலைமை என்ன ஆனது? உண்மையிலேயே பட்டம்மாளின் சொத்து குணசேகரனுக்கு சென்றதா? இதில் ஜீவானந்தம் என்ன செய்யப் போகிறார்? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement