சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? – கேப்டன் இறுதி அஞ்சலியில் ரஞ்சித் பேசிய பேச்சுக்கு குவியும் எதிர்ப்பு.

0
368
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

- Advertisement -

கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது கேப்டனை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஊரில் விஜயகாந்த் மன்றத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த திரைப்படங்களில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நின்று இருக்கிறார். குறிப்பாக எனக்குத் தெரிந்து ஏழை ஜாதி என்ற படத்தை நான் பார்த்தபோது அவர் ஒரு வசதியான வீட்டில் பிறந்து இருந்தாலும் அதை விட்டுவிட்டு மக்களுக்காக வந்து நின்று இருப்பார்.

-விளம்பரம்-

இதுபோன்று நிறைய கதாபாத்திரங்களை அவர் செய்து இருப்பார். அதன் அடிப்படையில் நான் என்னுடைய பாலியல் வயதில் விஜயகாந்தின் ரசிகனாக இருந்திருக்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடைய அரசியலும் தமிழ் திரையுலகில் அவருடைய பவரும் மிக முக்கியமான விஷயமாக எனக்கு தெரிந்தது. அவருடைய இழப்பு எனக்கு பெரிய வலியை உண்டாக்கியது. தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவர் மிக முக்கிய ஆளுமை.

சாதிய வர்க்கத்துக்கு எதிராகவும் பெரிய சக்தி வாய்ந்த ஆளுமைக்கு எதிராக மிகவும் திமிராக நின்று சண்டை செய்தவர். அவருடைய இழப்பு தமிழ் திரைப்பட துறைக்கும் அரசியல் திரைத்துறைக்கும் மிகவும் பெரிய இழப்புதான் என்று பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவர் ‘சாதிய மார்க்கத்திற்கு எதிராக சண்டை செய்தவர் விஜயகாந்த்’ என்று கூறியதை குறிப்பிட்டு பலரும் சாவு வீட்டில் வந்து கூட சாதி பற்றி பேசுவீர்களா? எங்கு போனாலும் சாதி புத்தி பேசினால் ஜாதி எப்படி ஒழியும் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

Advertisement