‘ஹே பிரபு,ஏ கியா ஹோவா’ STR48 படத்தின் அப்டேட் என்று பயர் விட்ட ரசிகர்கள் – கடைசியில் சிம்பு கொடுத்த செம பலப்.

0
107
- Advertisement -

சிம்புவின் வீடியோவால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிம்பு அவர்கள் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சிம்பு திரைப்பயணம்:

பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்து. இதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சிம்பு 48 படம்:

இதை தொடர்ந்து சிம்பு அவர்கள் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சிம்பு அவர்கள் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இவரின் 48வது படம் ஆகும். இந்த படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்த நடிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அதில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சிம்பு வீடியோ வைரல்:

இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சிம்புவின் உடைய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், அவர் போர்வீரர்கள் ஒரு களத்தில் சூழ்ந்திருக்கும் போது அவர்களுக்கு நடுவே சிம்பு நடந்து வருவது போல அந்த வீடியோவில் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே இது அவருடைய 48வது படத்திற்கான முன்னோட்ட காட்சி என்று சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி இருந்தார்கள்.

சிம்பு கொடுத்த விளக்கம்:

பின் இது தொடர்பாக சிம்பு பதிவிட்டு இருக்கும் பதிவுதான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இது சிம்பு புதிதாக நடித்து இருக்கும் விளம்பர படத்தின் ஒரு வீடியோ. இதைதான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். காசா கிராண்ட் நிறுவனம் சன்சிட்டி என்ற ஒரு புது விஷயத்தை லான்ச் செய்திருக்கிறார்கள்.இதனால் காசா கிரா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக சிம்பு மாறி இருக்கிறார். சென்னையில் காசா கிராண்ட் நிறுவனம் மூலம் புதிதாக கட்டி இருக்கும் இந்த டவுன்ஷிப்பிற்கான விளம்பரத்தில் தான் தற்போது சிம்பு நடித்திருக்கிறார்.

Advertisement