அறிமுக இயக்குனர், வெற்றியின் நடிப்பு, எப்படி உள்ளது பகலறியான்? – முழு விமர்சனம் இதோ

0
187
- Advertisement -

இயக்குனர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பகலறியான். இப்படம் இயக்குனர் முருகனுக்கு அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷயா கந்தமுதன் , சாப்ளின் பாலு, முருகன், வினு பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ரிஷிகேஷ் என்டர்டைன்மென்ட் பேனரில் லதா முருகன் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை விவேக் சரோ இசையமைக்க அபிலாஷ் ஒளிப்பதிவு செய்ய,குரு பிரதீப் எடிட்டிங் செய்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஒரே இரவில் நடக்கும் கதையை படமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார். மூன்று வெவ்வேறு ரவுடி கும்பல்கள் இடையே நடக்கும் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். ஒரு பக்கம் கதாநாயகன் வெற்றி தான் காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் கூட்டி செல்கிறார்.

- Advertisement -

மறுபக்கம் ஒரு ரவுடி தனது தங்கையை காணவில்லை என்று ஊர் முழுக்க தனது அடியார்களை வைத்து தேறி வருகிறார். அதேசமயம் அந்த ரவுடியை கொல்ல வேண்டும் என்று மற்றொரு கும்பல் ஆட்களை அனுப்புகிறது. இந்த மூன்று கதைகளும் மாறி மாறி படமாக்கப்பட்டு, இறுதியில் மூன்று கதைகளும் ஒரே இடத்தில் இணைகிறது.

மேலும் இயக்குனர் முருகன் ‘கைதி’ படம் போல் ஒரே இரவில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை தனது பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் டீடைலிங் செய்யத் தவறியுள்ளதால், பல இடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமல் உள்ளது. படத்தின் கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் போல் படம் முழுக்க யோசித்து வைத்திருக்கலாம்.

-விளம்பரம்-

படத்தில் சாய் தீனா போலீசாக வரும் சில காட்சிகள் சிரிக்கும்படி உள்ளது. அதேபோல் படம் முழுக்க வரும் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் ராம்குமாருக்கு தனி பாராட்டுக்கள். விவேக் சரோவின் இசையில் ஒரு பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றார் போல் நன்றாக உள்ளது. படத்தில் நிறைய காட்சிகள் எடிட்டிங் இல் தூக்கி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது, அதனை மட்டும் சரி செய்து இருந்தால் இன்னும் நல்ல படமாக இருந்திருக்கும்.

நிறை:

வித்தியாசமான கதைக்களம்

திரில்லர் திரைப்படம்

கிளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்

சண்டைக் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.

குறை:

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் எடிட்டிங் சரி இல்லை

கதாபாத்திரங்களுக்கு டீடைலிங் செய்திருக்கலாம்.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

மொத்தத்தில் பகலறியான் – முயற்சி

Advertisement