‘நான் அவன் இல்லை’ ஜீவன் நடித்துள்ள பாம்பாட்டம் எப்படி இருக்கு ? விமர்சனம் இதோ.

0
641
- Advertisement -

நான் அவன் இல்லை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜீவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பாம்பாட்டம். இந்தப் படத்தை வடிவுடையான் என்பவர் இயக்கிருக்கிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்பன் பட நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் பாம்பாட்டம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சுதந்திரத்திற்கு முன்னாள் நடக்கும் கதையை காண்பிக்கிறார்கள். அந்த கதையில் ராணி மகாதேவி தன்னுடைய சமாஸ்தானத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு ஜோசியர், நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் ராணி மகாதேவி கொள்ள உத்தரவிடுகிறார். இதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து வந்து ராணி மகாதேவியை கொன்றுவிடுகிறது.

- Advertisement -

அதற்கு பிறகு ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து இருக்கிறது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றிக் கொண்டிருப்பதாக ஊர் மக்கள் பேசுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார். அவர் வந்த பிறகு என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை. ஆக்சன், திரில்லர், அட்வென்சர் போன்ற பாணியில் படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் ஜீவன் அவர்கள் அப்பா- மகன் ஆகிய இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக அவர் வரும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவரை அடுத்து ராணி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்திருக்கிறார். இவர் வழக்கம் போல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பெரும்பாலும் படத்தில் சிஜி காட்சிகள் தான் வந்திருக்கிறது. சில இடங்களில் அந்த காட்சிகள் நன்றாக இருந்தாலும் சில இடங்களில் மோசமாக இருக்கிறது. முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நிறைய திருப்பங்களை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் ஆனால், சில காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் இயக்குனர் கதைகளத்தை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், சிஜி காட்சியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவனுக்கு இந்த பாம்பாட்டம் படம் ஒரு கம்பேக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

நிறை:

ஜீவன் நடிப்பு சிறப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

இரண்டாம் பதி நன்றாக இருக்கிறது

கதைக்களம் அருமை

குறை:

சிஜி காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

தேவையில்லாத சில காட்சிகளை நீக்கி இருக்கலாம்

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவனின் பாம்பாட்டம்- சீறிப் பாயவில்லை

Advertisement