கடைக்குட்டி சிங்கம் திரைவிமர்சனம்.!

0
3317
Kadaikutti-Singam-Movie-rivew
- Advertisement -

கார்த்திக்கும் பெரும்பாலும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. அவருக்கு எப்போதும் கிராமத்து சப்ஜெக்ட் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? இல்லையா.? பார்ப்போம்.

-விளம்பரம்-

Kadaikutti Singam

- Advertisement -

படம்:- கடைக்குட்டி சிங்கம்
இயக்குனர் :- பாண்டிராஜ்
நடிகர்கள்:- கார்த்திக், ஷெயிஷா , பிரியா பவானி ஷங்கர், சத்யராஜ், பானுப்ரியா ,விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன், சூரி.
தயாரிப்பு :- 2D என்டேர்டைன்மெண்ட்
வெளியான தேதி:- 22-07-2018

முக்கிய கதாபாத்திரங்கள்:

-விளம்பரம்-

குண சிங்கம்-(கார்த்திக்), ராணா சிங்கம் (சத்யாராஜ் ), கண்ணுக்கினியால்(ஷெயிஷா),ராணா சிங்கத்தின் முதல் மனைவி (விஜி சந்திரசேகர்) இரண்டாம் மனைவி (பானுப்ரியா)

படத்தின் கதைக்கரு:

முழுக்கு முழுக்க கிராமத்தில் நடக்கும் ஒரு கதை தான் இந்த படம். இந்த படத்தில் முதலில் ராணா சிங்கத்தின் (சத்தியராஜ்) பிளாஷ் பேக் ஒன்று வருகிறது. அதில் ராணா சிங்கத்தின் முதல் மனைவியான விஜி சந்திரசேகரசேகருக்கு 4 பெண் குழந்தைகள் பிறக்கின்றது. ஆனால், ராணா சிங்கத்திற்கு ஆண் குழந்தை வேண்டும் என்று பானுபிரியவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார் ராணா சிங்கம் . பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கிறது.

இதனிடையே ராணா சிங்கம் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் போது முதல் மனைவியான விஜி சந்திரசேகரசேகருக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது, அவர் தான் நம்ம ஹீரோ குண சிங்கம்(கார்த்தி). ஒரு விவசாயியாக வளர்ந்து வரும் கார்த்திக்கிற்கு தனது சொந்தத்தில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சத்யராஜ் நினைக்கிறார்.

Kadaikutty-Singam

கார்த்திக்கின் அம்மாவான விஜி சந்திரசேகர் தனது மகனுக்கு, தனது மகள் வழி பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டு என்று ஒத்தைக்காலில் நிற்கும் காட்சிகள் அவரின் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் தனது அக்கா மகள்களான பிரியா பவானி ஷங்கர் மற்றும் பின்னு ஆகிய இருவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஷாயிஷாவை காதலித்து வருகிறார். காற்று வெளியிடை படத்தில் மாடர்ன் மங்கையாக வலம் வந்த நடிகை ஷாயிஷா இந்த படத்தில் ஒரு கிராமத்து கதைக்கு தேவையான லுக்கில் கச்சிதமாக நடித்துள்ளார்.

கார்த்திக், தனது அக்கா மகள்களை திருமணம் செய்து கொள்ளாததால் அக்கா குடும்பத்திற்கும் கார்திக்கிக்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த அணைத்து கதைகளையும் சேர்த்து இந்த கதையில் விவசாயத்தயும் புகுத்தியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

விவசாயம், கிராம கதை என்ற விடயத்தை வெறும் வார்த்தையாக மட்டும் கூறாமல் , இந்த படத்தில் கிராமத்து காலச்சரம், ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ்,முறைப்பெண் பந்தம் என்று கிராமத்துக்கு சொந்தமான அத்தனை அம்சங்களையும் மிகவும் அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். இறுதியில் கார்த்திக் தனது அக்காக்களுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்தாரா, விவசாயத்திற்காக பாடு பட்டதில் வெற்றி கண்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.

Karthi-Kadaikutty-Singam

படத்தை பற்றிய அலசல்:

இக்கால இளசுகளிடம் விவசாயம் செய்ய ஒரு தூண்டுதலை இந்த படத்தில் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். சமூக அக்கறை கருத்துக்களை கொண்ட பல படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க குண சிங்கம் என்ற கதாபாத்திரத்தின் கதை தான் என்றாலும். இந்த படத்தில் விவசாயம் குறித்த முக்கியத்துவத்தை பரவலாக கூறியுள்ளனர். அதில் சில குடும்ப கதையையும் சேர்த்து கொஞ்சம் கமெர்ஷியல் பாணியில் கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். மொத்தத்தில் இந்த படத்தை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து கண்டு களிக்கலாம்.

படத்தின் பலம்:

முழுக்கு முழுக்க பேமிலி செண்டிமெண்ட் நிறைந்த இந்த படத்தில் மனதை தொடும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக குண சிங்கம் , தனது முறை பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுக்க கூறும் காட்சிகள் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது. அத்தோடு காமெடி நடிகர் சூரியின் நகைச்சுவையும் கொஞ்சம் கைதட்டலை பெறுகிறது. மேலும், படத்தின் வசனங்கள், கதாபத்திரத்தின் தேர்வு ஆகியவை படத்தின் பலமாக அமைந்துள்ளது.

Advertisement