விவாகரத்துக்கு செய்றது முன்னாடி இத யோசிங்க – ராதிகா முதல் மனைவி பேட்டி.

0
307
- Advertisement -

முதன்முறையாக மனம் திறந்து தன்னுடைய விவாகரத்து குறித்து சரத்குமாரின் முதல் மனைவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் படங்களில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக இவர் குணசித்திர வேடங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வாரிசு படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

சரத்குமார் திருமண வாழ்க்கை:

இதனிடையே இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி மட்டுமில்லாமல் பூஜா என்ற இன்னொரு மகளும் சரத்குமாருக்கு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. பின் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேருமே பரஸ்பரமாக 2000 ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்கள்.

சாயாதேவி பேட்டி:

விவாகரத்து பிறகு சாயாதேவி தன்னுடைய மகள் வரலட்சுமி உடன் தான் தனியாக வசித்து வசித்து வருகிறார். பின்னர் சரத்குமார் அவர்கள் நடிகை ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்து பேட்டியில் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி கூறியிருப்பது, திருமணம் செய்து கொள்வதற்கு வயது ஒரு தடை கிடையாது. அதற்கு மனதளவில் நாம் தயாராக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சொன்னது:

சரியான காரணங்களுக்காக தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும். திருமணம் என்பது ஒரு நாளில் முடிந்து கூடிய விஷயம் கிடையாது. திருமண பயணத்தில் இருவருமே சரியாக பயனிக்க வேண்டும். சரியான காரணங்கள் இருந்தால் அந்த பயணமும் சிறப்பாக இருக்கும். திருமணம் என்பது உடல் தேவைக்காக கிடையாது. நீங்கள் தெளிவாக இல்லாத பட்சத்தில் விவாகரத்து வாங்கும் போது உடல் அளவிலும், மனதளவிலும் நிறைய பாதிக்கப்படுவீர்கள்.

விவாகரத்து குறித்து சொன்னது:

குழந்தைகள் இருந்தால் நிலைமை இன்னுமே மோசமாக இருக்கும். விவாகரத்து பற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு நன்றாக யோசிங்கள். உங்கள் துணையிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. அதேபோல் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு ரொம்பவே முக்கியம். நீங்கள் எப்போது அதிகளவு கொடுக்க தயாராக இருக்கிறீர்களோ அப்போது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement