வயதான லுக்கில் மூர்த்தி, மூன்று மகன்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ப்ரோமோ இதோ. தனம் கேரக்டரில் யார் தெரியுமா ?

0
2459
PandianStores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. தற்போது சீரியலில் தனம், முல்லை, ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் குழந்தை பிறந்து விடுகிறது. அது மட்டும் இல்லாமல் அனைவரும் எதிர்பார்த்த படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய வீட்டின் புகு மனை விழாவும் சமீபத்தில் தான் நடந்தது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

எல்லோருமே தங்களுடைய பெரிய வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது சீரியல் மீனாவின் அப்பாவை அவருடைய இரண்டாவது மாப்பிளை பிரசாந்த் கொலை செய்துவிட்டு அந்த பலியை கதிர், ஜீவா மீது போட்டு விடுகிறார். மீனாவும் அதை நம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் ஒரு கட்டத்தில் பிரசாந்த் தான் இந்த கொலையை செய்கிறார் என்ற உண்மை மீனாவிற்கு தெரிய வருகிறது. இந்த உண்மையை மூர்த்தி குடும்பத்திடம் சொல்கிறார்.

இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து பிரசாந்தை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். பின் அனைவரும் நினைத்தபடி பிரசாந்த் உண்மையை சொல்கிறார். இதை ஐஸ்வர்யா மொபைலில் ரெக்கார்ட் செய்து கொள்கிறார். ஆனால், அவரிடம் இருந்து தப்பி சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஜனார்த்தன் கண்விழித்து நடந்த உண்மையெல்லாம் சொல்கிறார்.

-விளம்பரம்-

போலீஸ் அந்த ஆதாரத்தை கோர்ட்டில் ஆஜர் செய்கிறது. இதனை அடுத்து போலீஸ் கதிர்- ஜீவாவை விடுதலை செய்கிறார்கள். இனி பிரசாந்த் கைது செய்யப்படுவாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சேருமா? மீனா தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வருவாரா? என்ற பல அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று இருக்கிறது. இந்த நிலையில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும், விரைவில் பார்ட் 2 துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மூன்று மகன்களுக்கு தந்தையாக மூர்த்தி நடித்துள்ளார். மேலும், தனம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ரோஷினி நடித்துள்ளார். இது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தொடர்ச்சியா ? இல்லை மூர்த்தி கதாபாத்திரத்தின் ஸ்டாண்ட் அலோன் சீரியலா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement