விரைவில் முடியப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.
தற்போது சீரியலில் தனத்திற்கு நல்லபடியாக கேன்சர் ஆபரேஷன் செய்து வீடு திரும்பி விடுகிறார்கள். இந்த உண்மையை கதிர் கண்டுபிடித்து வருகிறார். இருந்தாலும், கதிர் யாரிடமும் சொல்லாமல் தனத்திற்கு ஆதரவாக நிற்கிறார். இன்னொரு பக்கம் மூர்த்தி தங்களுடைய புது வீட்டிற்கு குடும்பத்துடன் குடி சென்று விடுகிறார். ஜீவா- மீனா இருவரும் பழைய படியே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கலகலப்பாக சந்தோஷமாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தனத்திற்கு கேன்சர் வந்த உண்மையை ஐஸ்வர்யா தெரிந்து கொண்டு வீடியோ எடுத்து போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:
இதை வீட்டில் உள்ள அனைவரும் தெரிந்து கொண்டு சண்டை போடுகிறார்கள். இனி என்ன நடக்கும் என்று அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்து சீசன் 2 தொடங்க இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த சில நாட்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடியே இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் தான் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்த சீசனை முடித்துவிட்டு இரண்டாவது சீசன் எடுக்க இருப்பதாக சேனல் தரப்பில் கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்:
இந்நிலையில் இது தொடர்பாக சீரியலில் நடிக்கும் சிலர் கூறியிருப்பது, தற்போது நடந்து கொண்டிருக்கும் கதையை முடித்துவிட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்று பார்ட் 2 கதையை தொடங்க எடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். இதனால் யூனிட்டே அடுத்த பார்ட்டுக்கு தயாராகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் அக்டோபர், நவம்பர் மாதத்தில் இந்த சீசன் தொடங்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். சீரியலின் டைட்டிலை மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பதிலாக பாண்டியன் இல்லம் என்று மாத்திக்கலாம் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தார்கள். எல்லாம் சரியாகிக் கொண்டிருக்கும்போது இந்த சீரியலில் நடிக்கும் சுஜிதா, குமரன் இரண்டு பேர் மட்டுமே இரண்டாவது சீசனில் நடிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
சீசன் 2 குறித்த சர்ச்சை:
இது குறித்து விசாரித்தால் சுஜிதா தனிப்பட்ட விஷயத்தினால் நடிக்க முடியாது என்றும் குமரன் சினிமாவில் பிஸியாக இருப்பதால் நடிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். ஆனால், இந்த சீரியலை பொருத்தவரை எல்லா நடிகர்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்கள். அதனால் முதல் சீசனில் நடித்த அனைவரும் இரண்டாவது சீசனில் நடித்தால் தான் வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்கும் என்று சேனல் தரப்பில் இரண்டு பேரிடமும் பேசி இருக்கிறார்கள். பின் எப்படியோ பேசி இரண்டு பேரிடமும் சம்மதம் வாங்கி விட்டார்கள். ஆனால், திரும்பவும் இரண்டு பேருமே சீரியலில் நடிக்க முடியாது என்று மறுப்பதாக தெரிய வந்திருக்கிறது.
சேனல் தரப்பு முடிவு:
அது மட்டும் இல்லாமல் அவர்கள் இரண்டு பேருக்கும் பெரிதாக எந்த கமிட்மெண்டும் இல்லை என்பது போல் தான் தெரிகிறது. ஆனால், என்ன காரணம் இவர்கள் நடிக்க மறுப்பதற்கு என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் சீரியலுக்கு வெளியில் ஒரு பெரிய அரசியலை நடப்பதாகவும் கூறுகிறார்கள் கடைசியாக ஆக மொத்தம் குமரன், சுஜிதா இருவரிடமும் சேனல் தரப்பிலிருந்து மீண்டும் பேசி அவர்கள் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இரண்டாவது சீசனுக்கு அவர்களுக்கு பதிலாக வேறொரு நடிகர்களை போட்டு எடுக்க முடிவு செய்தார்கள். இந்த இரண்டு முடிவும் சரியாக வரவில்லை என்றால் முதல் பார்ட் உடனே சீரியலை முடித்து விடலாம் என்று சேனல் தரப்பு யோசி வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.