மகன் பிறந்தநாளில் முதன் முறையாக மகனின் புகைப்படத்தை பதிவிட்ட ஹேமா.

0
10858
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் வைல்டு கார்ட் சுற்று – மக்கள் வாக்கால் இறுதி போட்டிக்கு சென்ற போட்டியாளர். அதுவும் இத்தனை சதவீத ஓட்டாம்

- Advertisement -

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று வருகிறது. இவர் சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது கர்ப்பமாக இருந்தார்.

அதனால் சீரியலிலும் இவர் கர்ப்பமாக இருப்பது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், சீரியலில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. அதே போல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மேலும், இவரது மகனுக்கு சாத்விக் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் தனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஹேமா.

-விளம்பரம்-
Advertisement