ஹேமாவை பாடாய் படுத்தும் அவரின் மகன், அவரே பகிர்ந்த வீடியோ – அதுக்குள்ள எப்படி வளந்துட்டு இருக்கார் பாருங்க.

0
1037
hema
- Advertisement -

சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான குடும்பக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.

- Advertisement -

செய்தி வாசிப்பாளர் To நடிகை :

அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

ஹேமா நடித்த படங்கள் :

விஷால் நடித்த பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா போன்ற பல படங்களில் நடித்து உள்ளார் ஹேமா . இருந்தாலும் இதுவரை இவரருக்கு கிடைக்காத புகழ் எல்லாம் பாண்டியன் ஸ்டோர் மீனா கதாபாத்திரம் மூலம் கிடைத்து வருகிறது.அதோடு இவரை பார்ப்பதற்கு என்றே ஓரு கூட்டம் உள்ளது. இவர் சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது கர்ப்பமாக இருந்தார்.

-விளம்பரம்-

ஹேமாவிற்கு பிறந்த மகன் :

அதனால் சீரியலிலும் இவர் கர்ப்பமாக இருப்பது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், சீரியலில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஹேமா நிஜத்தில் பிரசவ நாளில் அவருக்கு லீவு கொடுத்து அனுப்பி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் ஹேமாவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. மூன்று மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் மீனா சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.

பாடாய் படுத்தும் மகன் :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹேமாஅடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதே போல சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஹேமா தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது யூடுயூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் ஹேமாவை பாடாய் படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement