சிகெரெட் வாங்கிட்டு வர சொன்னாங்க. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பேட்டி. வீடியோ.

0
50258
jeeva
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.

-விளம்பரம்-

இந்த பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

சன் மியூசிக்ல நான் இருக்கும் போது பாத்தீங்கன்னா எனக்கு தினமும் ஒரு சோக்கு 250 ரூபாய் மட்டும் தான் தருவாங்க. மாசத்துல முப்பது நாள் எனக்கு வேலை கிடைக்குமா என்று சொல்ல முடியாது. அதிலேயும் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அங்கு இருப்பவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும். அவருடைய பெயர் நான் சொல்ல விரும்பவில்லை. நான் ஸ்லாட் வர மாதிரி இருந்தால் எனக்கு மொபைலில் மெசேஜ் வரும். அப்படி ஒரு நாள் எனக்கு போன் வரவில்லை. நான் போன் பண்ணி எனக்கு ஸ்லாட் வரவே இல்லை என்று சொன்னேன். அதற்கு அவர் என்னை சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வாங்க என்று சொன்னார். நானும் வாங்கி கொடுத்தேன். பின் எனக்கு ஸ்லாட் வந்தது. பின் மறுநாள் எனக்கு ஸ்லாட் போடவே இல்லை. உடனே நான் அவரிடம் போன் பண்ணி கேட்டதற்கு அவர் ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு வாங்க என்று சொன்னார். ஆனால், நான் வாங்கிட்டு போவில்லை.

அதனால் எனக்கு ஸ்லாட் போடவில்லை. அதற்கு அவர் நீங்க எப்ப ஜீன்ஸ் பேண்ட் வாங்கி தரீங்களோ அப்ப நான் வேலைக்கு சொல்லுறேன் என்று சொன்னார். பின் நான் ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு போனேன். அதற்கு பிறகு எனக்கு சன் ம்யூசிக்கில் கூப்பிட்டார்கள். இப்படியெல்லாம் இருந்தால் தான் வேலை கிடைக்குமா? என்று என் மனதில் தோன்றியது. ஆண்களுக்கு இந்த நிலைமை என்றால் பெண்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். இந்த வேலை வேணாம் என்று கூட நினைத்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலை வேற வேற வழி இல்லாம தான் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு நான் வேலை செய்தேன். அங்கு நான் மூன்றரை வருடம் கஷ்டப்பட்டு பிறகு தான் சீரியலில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

Advertisement