எங்களுக்குள் என்ன பிரச்சனை ? சித்ராவை டேக் செய்து குமரன் வெளியிட்ட வீடியோ.

0
26319
Kumaran-Chithra

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். சித்ரா– குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் அட்ராசிட்டி ஆக இருந்தது. அந்த அளவிற்குப் சூப்பராக பட்டைய கிளப்புனாங்க. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : நட்பிற்காக நான் வாங்கிய சம்பளமும் கம்மி தான் – ஆனால், யாரோ ஒரு XY காக-தேவதையை கண்டேன் ஸ்ரீ.

- Advertisement -

அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை கான்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நீங்கள் நினைப்பது போலவும் வெளியில் பேசிக் கொள்வது போலவும் பெரிய சண்டை எல்லாம் கிடையாது. எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள்தான். எனவே, வெளியில் செல்வதை எல்லாம் நம்பாதீர்கள். நாங்கள் இன்னும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று கூறி, என்ன நடந்தாலும் பாசிட்டிவாகவும், அமைதியாகவும் இருங்கள். எதுவும் நிரந்தரம் கிடையாது. நாங்கள் இருவரும் இன்னும் நண்பர்களாக தான் இருக்கிறோம். எங்களது நட்பை மேலும், வளர்க்க முயற்சி செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டு சித்ராவை டேகும் செய்திருக்கிறார் குமரன்.

Advertisement