சொன்னபடியே பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ள விஜய் டிவி.

0
378
laksmi
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து பாதியில் விலகி போன நடிகைக்கு விஜய் டிவி மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை இடத்தில் உள்ளது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை. மேலும், இந்த சீரியலில் லக்ஷ்மி அம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் நடிகர் விக்ராந்தின் அம்மா மற்றும் விஜய்யின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சீரியலில் இவர் இறந்து போன மாதிரி காட்சிகள் வைக்கப்பட்டு சீரியலில் இருந்து இவருடைய கதாபாத்திரத்தை முடித்தார்கள். அதிலும் இவருடைய இறந்த காட்சி மற்றும் இறுதி சடங்கு காட்சி எல்லாம் ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. சீரியலில் மட்டுமில்லாமல் அந்த எபிசோடை பார்த்தவர்களும் கண்கலங்கி விட்டார்கள்.

- Advertisement -

அந்த அளவிற்கு உணர்வு பூர்வமாக இருந்தது. மேலும், இவர் சீரியல் இருந்து வெளியேறியது குறித்து சோஷியல் மீடியாவில் பல சலசலப்புகள் வந்தது. ஆனால், இந்த தகவலுக்கு ஷிலா அவர்கள் மறுப்பு தெரிவித்து வீடியோ போட்டிருந்தார். மேலும், கதைக்கு தேவையாக இருந்தால் தான் இயக்குனர் இறப்பது போன்ற காட்சிகள் எடுத்ததாகவும் விரைவில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளேன் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை ஷீலா அவர்கள் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் தாயாக அறிமுகமாகியுள்ளார்.

மீண்டும் இவரை சீரியலில் பார்த்த உடன் ரசிகர்கள் அனைவரும் குஷியாகி உள்ளார்கள். பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. நடிகை ஷீலா அவர்கள் சீரியலில் ராதிகாவின் தாயாக வந்தது குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்த சீரியலிலும் நடிகை ஷீலா மக்கள் மத்தியில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement