பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ? கண்டிப்பா நீங்க எதிர்பார்த்திருக்க மாடீங்க.

0
737
BiggBosstamil5
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்திருக்கிறது 18 போட்டிகளில் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டார் இவர்களை தொடர்ந்து மலேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நாடியா முதல் போட்டியாளராக வெளியேறினார்.

-விளம்பரம்-

பின்னர் இந்த சீசனில் கண்டன்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ராஜா, இரண்டாம் வாரத்திலேயே வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் சின்ன பொண்ணு வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் சுருதி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதே போல இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைவாணி மற்றும் நிரூப் காப்ற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

suruthi

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிநய், ஐக்கி, இசைவாணி ஆகிய மூவரில் யாராவது தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரத்தில் சுருதி வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement