விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். தற்போது இந்த சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். இந்த சீரியலில் இரண்டாவது தம்பி கதிருக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவிற்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். இந்நிலையில் முல்லையும், ஜீவாவும் சேர்ந்து ஆடிய நடன வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
குமரன், சித்ரா இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய நடன வீடியோக்களை நாம் அனைவரும் பார்த்து இருக்கிறோம். இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் ஆடி இருந்தார்கள். ஆனால், தற்போது ஜீவா(வெங்கட்), சித்ரா இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய நடன வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்து பலர் வியந்து போய் உள்ளார்கள். இவர்களுடைய நடனம் வேற லெவல் என்று கமெண்டுகளை தெரிவித்தும் வருகிறார்கள். இந்த பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். சொல்லப்போனால் இவரது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது குமரன் தான். ஆனால், குமரன் அந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக கதிர் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தார்.