பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைர நகை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – காரணம் இது தானம்

0
319
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை வாங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். சமீபத்தில் தான் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். தற்போது சீரியலில் தாங்கள் வாங்கும் புது இடத்தை பதிவு செய்யும் முயற்சியில் மூர்த்தி இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இன்னொரு பக்கம், கதிர் – முல்லை நடத்தும் ஹோட்டல் நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் புதிதாக நடக்க இருக்கும் சமையல் போட்டியிலும் கலந்துகொள்ள கதிரும் முல்லை செல்ல இருக்கிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவின் மீது அதிக ஆர்வம் உடையவர்.

ஹேமா குறித்த தகவல்:

இவர் எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் நிலை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருந்தார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஹேமா நடிக்கும் சீரியல்:

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிலும் இவர் சீரியலில் காமெடி, வில்லி, நல்லவர் என மூன்றும் கலந்த கலவையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய இயல்பான பேச்சும் நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம். இது ஒரு பக்கமிருக்க, ஹேமா அவர்கள் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதில் அவர் பல வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை ஹேமா வாங்கிய வைர நகை:

இந்நிலையில் நடிகை ஹேமா வைர நகை ஒன்று வாங்கி இருக்கிறார். அதன் மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய். இது குறித்து அவர் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், ஒரு வைர கம்மல் வாங்குவது என்பது என்னுடைய வாழ்நாளில் பெரிய கனவாக இருந்தது. ஒருவர் உழைத்து சொந்தமாக விலை உயர்ந்த ஒரு பொருள் வாங்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த சந்தோஷத்தை நானும் அடைந்திருக்கிறேன் என்று கூறி வைர நகை வாங்கும் போது எடுத்த வீடியோவையும் தன்னுடைய சேனலில் இவர் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement