அப்போதே முடிவு செய்தேன் உடனடியாக நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்று – பணிமலரின் 100 நாள் பிட்னஸ் சாலஞ்.

0
419
Panimalar
- Advertisement -

நீச்சல் குளத்திற்கு உள்ளே தம் கட்டி பனிமலர் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகிவருகிறது . சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

-விளம்பரம்-

செய்தி வாசிப்பாளரான பனிமலர் கோயம்புத்தூரில் பிறந்தவர். பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

ண்வெளி ஆராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி அது. இப்போது பணிமலர் பீன்ஸ் பெண்கள் என்ற புதிய நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பதில் கொடுத்து அடிக்கடி பேசு பொருளாகவும் மாறி இருக்கிறார் பனிமலர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பனிமலர் கடந்த சில தினங்களாக பிட்னஸ் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக 100 டேஸ் பிட்னஸ் சேலஞ்ச் என்று தினமும் ஒரு பிட்னஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவரது பிட்னஸ் வீடியோக்களில் நீச்சல் குளத்தில் இவர் பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.மேலும், நீச்சல் குள அனுபவம் குறித்து பதிவிட்டுள்ள அவர் ‘சென்ற வருட புத்தாண்டிற்கு ஒரு ரெசார்ட் போயிருந்தோம். அங்கிருந்த நீச்சல் குளத்தில் மேலிருந்து உள்ளே குதிக்க அவ்வளவு பயம்.

-விளம்பரம்-

குழந்தைகள் எல்லாம் குதிக்கிறார்கள் என்னால் முடியவில்லை. ஹக்கிம் அண்ணா திட்டுகிறார், அனைவரும் சிரிக்கிறார்கள், சொல்லிக் கொடுக்கிறார்கள் ஆனாலும் முடியவில்லை, இறுதியாக குழந்தைகளுக்கு வாங்கிய பலூனை மாட்டிக்கொண்டு குதித்தேன். அப்போதே முடிவு செய்தேன் உடனடியாக நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்று, சென்ற ஆண்டின் இலக்காகக்கூட வைத்திருந்தேன், ஏதேதோ காரணங்களால் செய்யவில்லை. இன்று நீச்சல் வகுப்பில் சேர்ந்துவிட்டேன், அத்தனை மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement