உழைப்பு, தன்னம்பிக்கை – அஜித்துக்கு துணை முதலவர் பன்னீர் செல்வம் வாழ்த்து.

0
588
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம “தல அஜித்”. மேலும், இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் 2019 ஆம் வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார்.அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதே போல பல விதமான பொழுது போக்கில் ஈடுபட்டு வரும் அஜித் அதை கூட சீரியஸாக எடுத்துக்கொண்டு தான் பயிற்சி செய்வார். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 46ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார். அதில் தற்போது சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க மெடல் வென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ஒன்றல்ல ரெண்டல்ல நடிகர் அஜித் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் அஜித்திற்கு, தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்

-விளம்பரம்-
Advertisement