பரியேறும் பெருமாள், ஜெய் பீம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் தான ஹீரோ – விவசாயிகளின் வலியை சொல்ல வரும் ‘பரமன்’

0
283
- Advertisement -

தமிழ் முண்டாசுப்பட்டி, பிசாசு, ஜெய் பீம் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி தற்போது ‘பரமன்’ படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ படத்தை இயக்கிய சபரிஸ், இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

- Advertisement -

படத்தின் பர்ஸ்ட் லுக் :

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.இதனை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டு இருந்தனர். மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் இயக்குநர் சபரிஸ் இயக்கத்தில் அவரது முதல் படமான ‘கால்ஸ்’ (calls) கடந்த கோவிட் காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது.

விவசாயிகளின் வாழ்வியல் :

அதே சமயம் இப்போது வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்த படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. அதுமட்டுமல்ல அமேசான் பிரைமில் இதுவரை பல கோடி பேருக்கு மேல் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர். தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஸ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார். தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-

இயக்குனர்கள் பாராட்டு :

‘பரமன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள இயக்குநர்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனர். குறிப்பாக இயக்குநர் சீமான் இப்படத்தின் டிரைலரையும் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது எனக் கூறி படக்குழுவிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

வரவேற்பை பெறுமா :

தமிழ் சினிமாவை பொறுத்த வரை விவசாயத்தை மையமாக கொண்டு பல படங்கள் வந்து இருக்கிறது. விஜய்யின் கத்தி, ஜெயம் ரவியின் பூமி, கடைசி விவசாயி என்று பல படங்கள் வந்து இருக்கின்றது. ஆனால், கடைசி விவசாயி படம் அளவு வேறு எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த பரமன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement