- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-
varisu

அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி இ. வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இருந்தார்கள்.

- Advertisement -

பல விருதுகளை பெற்ற படம் :

இந்நிலையில் பார்த்திபன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு படங்களை பற்றியும், அமைச்சரான உதயநிதி அவர்களை பற்றியும் பல விஷியங்களை பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது `எனக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை விட திரைப்பட விழாதான் என்னுடைய விழா. நான் இதுவரை மூன்று சர்வதேச விருதுகளை வாங்கிவிட்டேன் இருந்தாலும் எனக்கு விருதுகளின் மீது உள்ள ஆசை இனமும் போக வில்லை.

என்னுடைய இரவின் நிழல் திரைப்படம் இதுவரை 114 விருதுகளை வாங்கிவிட்டது, இந்நிலையில் தற்போது சென்னை சர்வதேச விழாவில் வெளியிடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இப்படத்திற்கு 21 கோடிகள் செலவு செய்திருந்தாலும் படம் அந்த செலவை ஈடு செய்துள்ளதா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என்னுடைய இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவது மக்களை சென்றடைந்துள்ளது ,சினிமாவில் விருது படங்கள் மற்றும் வர்த்தக படங்கள் என இரண்டு படங்கள் உள்ளன. இவற்றில் வர்த்தக படங்களுக்கு அதிக வருமானம் வரும் என்றும் பார்த்திபன் கூறினார்.

-விளம்பரம்-

வாரிசு பற்றி கூறியது :

அதற்கு பிறகு விஜய்யின் வாரிசு பட சர்ச்சயை பற்றி பேசிய பார்த்திபன் விஜய் போன்ற நடிகர்களுக்கு பிரச்சனை வந்தால் தான் அவர்கள் நடித்த திரைபடம் இன்னமும் ஹிட் அடிக்கும். அதோடு எல்லா பிரச்னைகளையும் தாண்டி வெற்றியடைவதும் ஹீரோயிசம் தான் என்றும். நான் “வாரிசு” படத்தை திரையரங்கில் முதலில் பார்ப்பேன் என்று சொல்வதற்கு “துணிவு” வேண்டும் என்று தன்னுடைய பணியில் பார்த்திபன் பேசியிருந்தார். மேலும் பெண்களின் சக்தி பற்றி ஒரு படம் எடுக்க பணிகள் நடந்து வருவதாக கூறினார்.

மேலும் உதயநிதியின் ரெட் செயின்ட் நிறுவனம் தான் என்னுடைய படத்தினை வெளியிட்டது. அதிக திரையரங்குகள் மற்றும் சரியாக கணக்குகளும், திரையரங்குகள் தர வேண்டுய பணமும் உடனடியாக கிடைத்தது. மேலும் உதயநிதி அமைச்சராக வந்த பிறகு நல்ல காரியம் நடந்துள்ளது. உதயநிதியை வாரிசு என்று ஒதுக்கிவிடக்கூடாது, ஏனெற்றால் அவரிடம் அவருடைய தாத்தாவின் திறமையின் ஒரு பகுதி இருக்கிறது. உதயநிதிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக நல்ல அமைச்சராக இருப்பர் என்று கூறினார்.

Advertisement