ராமின் உதவி இயக்குனர் இயக்கி இருக்கும் ‘பருந்தாகுது ஊர் குருவி’ – முழு விமர்சனம் இதோ.

0
866
parunthaagathu
- Advertisement -

தங்க மீன்கள், பிரம்பு போன்ற படங்களை இயக்கிய இய்குனார் ராமிடம் உதவி இருக்குநராக பணியாற்றிவந்த கோ.தனபாலன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூஷோ, காயத்த்ரி யார், அருள் சங்கர், கோடாங்கி வடிவேல், ராம்தாஸ், விநியோத் சாகர் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள திரைப்படம் “பருந்தாகுது ஊர் குருவி”. சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கதைக்களம் :

அடர்ந்த ஒரு மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் சிறிய சிறிய திருட்டுகள் செய்து “பெட்டி கேஸ்” குற்றவாளியாக இருந்து வருகிறார் கதாநாயகன் நிஷாந்த் என்கிற ஆதி. அதே நேரத்தில் சென்னையில் இருந்து பல கேள்விகளுடன் இந்த காட்டிற்கு வருகிறார் பிரசன்னா. இவரை தீர்த்துக்கட்ட அடியாட்கள் வருவதினால் பதுங்குவதற்காக காட்டிற்குள் வருகிறார். இந்நிலையில் மிளகு காட்டிற்குள் யாரையோ வெட்டி போட்டதாக போலீசுக்கு தகவல் வர அந்த இடத்திற்கு வழிகாட்டுவதற்கு வலுக்கட்டாயமாக ஆதியை இழுத்து செல்கிறார் காவலர் போஸ்.

- Advertisement -

பிணத்தின் அருகே சென்ற பின்னர் ஆதியின் கையையும் பிணத்தின் கையையும் ஒரே கைவிலங்கு கொண்டு பூட்டிவிட்டு டீ குடிக்க செல்கிறார். அப்படி செல்லும் நேரத்தில் பிணமாக இருக்கும் நபர் உயிருடன் இருப்பதை உணர்கிறார் ஆதி. அந்த வேலையில் பிரசன்னாவின் தொலைபேசிக்கு போன் வருகிறது. அதில் ஒரு பெண் பிரசன்னாவை காப்பாற்றுங்கள் என்று அழுது கதறுகிறார். இந்த நேரத்தில் இவர்களை தீர்த்துக்கட்ட கும்பல் வருகிறது. இந்நிலையில் இந்த கும்பலிடம் இருந்து இவர்கள் இருவரும் தப்பித்தனரா? பிரசன்னா யார்? அந்த பெண் யார்? அந்த மர்ம நபர்கள் யார்? என்பது தான் படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக வரும் நிஷாந்த் ரசிகர்களுக்கு பரிட்சையமான நடிகராக இல்லாமல் இருந்தாலும் கதைக்கு தேவையான நடிப்பை சரியாக கொடுத்திருக்கிறார். அதே போல மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு என்ன தேவையோ அதனை மட்டும் சரியாக செய்திருக்கின்றனர். கோடாங்கி வடிவேலுவின் நடிப்பு பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அதே போல வயிற்றில் குத்து, மண்டையில் அடி, சாப்பாடு தண்ணி இல்லாமல் சாகும் நிலையில் இருக்கும் பிரசன்ன தீடிரென நன்றாக நடந்து வருவது செயற்கை தனமாக இருந்தது.

-விளம்பரம்-

படம் திரில்லர் கதையாக இருந்தாலும் அந்த அளவுக்கு வேகம் இல்லை. ஆனால் ஒளிப்பதிவாளர் அஸ்வின் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பாளர் ரஞ்சித் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தது. படத்தில் பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

குறை :

திரைக்கதை சொதப்பல்.

படத்தில் நம்பகத்தன்மை குறைவாக இருந்தது.

கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

நிறை :

கதாபாத்திரங்களின் நடிப்பு பரவாயில்லை.

பின்னணி இசை, ஒளிப்பதிவு கதைக்கு பக்கபலம்.

மொத்தத்தில் “பருத்தாகுது ஊர் குருவி” படம் பருந்தாகவில்லை என்றால் பரவாயில்லை, அதற்கு பறக்காவே தெரியவில்லை என்பது தான் சோகம்.

Advertisement