பருத்திவீரன் புகழ் லட்சுமி பாட்டியை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்திக் அவர்கள் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சாகருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இந்த படம் தமிழகம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, இந்த படத்தில் வந்த பாடல்கள் எல்லாம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது.
ஒரே பாடலில் பிரபலம் :
தற்போதும் திருவிழாக்களில் இந்த படத்தில் வரும் பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் வரும் பாடல்களை பாடியவர் லட்சுமி பாட்டி. இவர் விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியை சேர்ந்தவர். இவர் இந்த படத்தில் பாடியது மட்டும் இல்லாமல் நடித்தும் இருக்கிறார். அந்த சமயத்தில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்ததால் பருத்திவீரன் லட்சுமி என்று பிரபலமானார்.
சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி :
இந்நிலையில் இவரை குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரத்தில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்து நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார். இதை இவர் அவருடைய அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தார். மேலும், திருவிழாக்களில் இவர் பாடி வந்திருக்கிறார். அப்படி தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தடித்து. தற்போது இவர் வயது முதிர்ந்து வீட்டில் முடங்கி இருக்கிறார்.
லட்சுமியின் பேட்டி :
சமீபத்தில் பேட்டியில் இவர் கூறியிருந்தது, நான் சிறுவயதிலிருந்தே நாட்டுப்புறப் பாடல்களை பாடுகிறேன். இது என்னுடைய அம்மா தான் எனக்கு கற்றுக் கொடுத்தார். திருவிழாக்களில் பாடி கொண்டிருக்கும்போது தான் அமீர் சார் என்னை அழைத்து படத்தில் பாட வைத்தார். நான் இந்த அளவிற்கு பிரபலமானதற்கு அவருக்கு தான் நன்றி சொல்லணும். காலமெல்லாம் அமிர் சாருக்கு நன்றி கடன் பட்டிருப்பேன். இப்பொழுதும் கோவில் திருவிழாக்களில் பாட கூப்பிடுகிறார்கள்.
பிறவியிலேயே மாற்றுத்திறனாளி :
ஆனால், என்னால்தான் முன்பு போல பாட முடியவில்லை. அதனால் எனக்கு பாட ஆசை இருந்தும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன். அதோடு நான் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் நடக்க முடியவில்லை. மேலும், வசதி இல்லாததால் தனியாக கார் ஏற்பாடு செய்து கூட போக முடியவில்லை என்பதால் தான் வீட்டில் முடங்கி இருக்கிறேன். பெற்ற பிள்ளைகளும் கூலி வேலைக்கு செல்பவர்கள் தான். அரசாங்கம் பார்த்து ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.