எதிரிகளின் கொட்டம் சிறுத்தைகளால் மட்டுமல்ல, ரஞ்சித் படையாலும் அடங்கும் – திருமா புகழாரம்

0
511
- Advertisement -

நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித்தை தொல் திருமாவளவன் எம்பி புகழ்ந்து தள்ளியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் கவிஞர் மௌனன் யாத்திரிகாவில் ‘எருமை மறம்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம் பி கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த நூலை பா ரஞ்சித் வாங்கி இருக்கிறார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் தொல். திருமாவளவன் கூறியிருப்பது, எருமை மறம் நூலில் எதிரியின் கொட்டம் உரையாடல் மட்டும் அல்லாமல் நம் கலையில் ஆளும் அடங்கும் என்ற வரியை குறிப்பிட்டு படையாலும் அடங்கும் என்ற பொருளால் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

நிகழ்ச்சியில் திருமாவளவன் :

அரசியல் களத்தில் சிறுத்தைகள் திருப்பி அடிக்கிறார்கள் என்றால் கலை உலகத்தில் இப்போது அடிக்க அடி, நொடிக்கு நொடி, திருப்பி அடிக்கக்கூடிய படையை ரஞ்சித் உருவாக்கி இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதில் உண்மையும் இருக்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது. இது வரலாற்றின் கட்டாயம். என்பதுகளிலேயே கலைத்துறை இயக்குனர் பாரதிராஜா கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இயக்குனர் பா ரஞ்சித்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

பா ரஞ்சித் குறித்த தகவல்:

தற்போது பா ரஞ்சித்தை புகழ்ந்து திருமாவளவன் பேசியிருக்கும் கருத்து தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார்.
இதனால் இவர் படங்கள் குறித்தும், இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது.

-விளம்பரம்-

பா.ரஞ்சித் திரைப்பயணம்:

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில்வெளியாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி உட்பட பல நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார்.

தங்கலான் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து உள்ள படம் தங்கலான். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்இருக்கிறார் . கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனான், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி, என பலர் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

Advertisement