முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை கொச்சையாக பேசி அவதூறாக வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்ட விவகாரம் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். பெரும் சர்ச்சையை இந்த விகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மத்தது வேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் பாருங்க : ஏன் பிக் பாஸ கம்பேர் பண்றீங்க ? லாஸ்லியா சாப்பிடாம அவர் இப்போ சாப்பிடறது இல்லையா – லாஸ்லியா ரசிகர்களை கடுப்பாக்கிய வனிதா.
இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் வாசித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். அந்த பதிவில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம்.இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்தர் சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். தமிழ்க்கடவுள்முருகனுக்குஅரோகரா என்று பதிவிட்டுள்ளார் விஜயகாந்த.
நடிகர் விஜயகாந்த் அவர்கள் சினிமா உலகத்தை விட்டு அரசியலில் மாற்றத்தை உருவாக்க பல முயற்சிகளை செய்து வந்தார்.ஆனால், இவருடைய உடல் நலக்குறைவு காரணமாக செய்ய முடியாமல் போனது. இவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டது. ஆனால், இவரை பூரண குணம் செய்ய முடியவில்லை. பின் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். விஜயகாந்த மீண்டும் பழைய நிலைமைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.