‘எப்பா பசங்க படத்துல வந்த பையனா நீ’ – தமிழ் நாடு திரைப்பட விருதில் ஆச்சரியப்பட வைத்த அந்த சிறுவன்.

0
437
pasanga
- Advertisement -

பசங்க படம் அன்பு விருது வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் விருது பெறுபவர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் சினிமா நடிகர் நடிகைகள், தொலைக்காட்சிக்கு வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கு என்று தமிழ்நாடு சார்பில் விழுது வழங்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த விருது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரசும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த விருதுகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. இது ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

- Advertisement -

தமிழ்நாடு மாநில விருது:

அதில் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை. இடையில் தேர்தல்,கொரோனா பிரச்சனை காரணமாக இந்த விழா தள்ளி கொண்டே சென்றது. தற்போது தமிழ்நாடு அரசு இந்த விழாவை சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தி இருக்கிறது.

விருது வாங்கிய பசங்க பட நடிகர்:

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் பசங்க பட அன்பு விருது வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பசங்க. இந்த படத்தை சசிகுமார் தயாரித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் விமல் கதாநாயகனாக சினிமாவுலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

பசங்க படம் கிசோர்:

இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டியன், தாரணி, முருகேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கிஷோர். அதற்குப்பின் இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்திருந்த கோலி சோடா என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

விருது வாங்கிய கிசோர்:

இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது பசங்க படம் தான். தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிரிவில் கிஷோருக்கு விருது கிடைத்திருக்கிறது. இவர் விருது வாங்கி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும், பசங்க பட அன்புவா இது! என்று ஆச்சரியத்தில் வியந்து போய் கமெண்ட்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement