மணிமேகலை- பிரியங்கா விவகாரம் தொடர்பாக பாவனி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன்.
மணிமேகலை பதிவு:
புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான். அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்.

பிரியங்கா குறித்து சொன்னது:
அவர் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். இதற்கு முன்பு போல் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இப்போது இல்லை. அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை. இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
பிரபலங்கள் கருத்து:
அதோடு பலரும் பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். இது தொடர்பாக அனிதா சம்பத், தர்ஷா குப்தா, பிக் பாஸ் ஷிவின், ஐஸ்வர்யா தத்தா, அர்ச்சனா என பல பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் பிரியங்காவை திட்டியும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரியங்காவிற்கு ஆதரவாக நடிகை பாவனி ரெட்டி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாவனி ரெட்டி பதிவு:
அதில் அவர், மணிமேகலைக்கு தான் என் செக்யூரிட்டி. தன் வேலை போய்விடுமோ என்ற பயம் அவர் இருக்கு. பிரியங்கா ஒன்றும் dominant ஆக இல்லை. உண்மை வெல்லும் என்று போட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா-பாவனி ரொம்ப நெருக்கமாக பழகி வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்கள் இருவருக்கும் மத்தியில் நல்ல உறவு நீடித்துக் கொண்டிருக்கிறது. பாவனி-அமீர் இருவரும் சேர்ந்து இருப்பதற்கு காரணமே பிரியங்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.






