மூனு படமும் Flop, இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன். இயக்குனரின் திடீர் முடிவு. (குருதிப்புனல் கூடவா Flop ?)

0
227
vikram
- Advertisement -

மூன்று படங்களும் தோல்வி, இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன் என்று கமல் பட இயக்குனர் பி. சி. ஸ்ரீராம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பிசி ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சந்திரமௌலி – சாந்தா ஆவார்.

-விளம்பரம்-

மேலும், இவர் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பின் இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்து திரைத் துறையில் நுழைந்தார். தேசிய விருது பெற்ற பல வெற்றிப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அதோடு இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள் தொடங்கி தற்போது உள்ள நடிகர்கள் வரை பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

பிசி ஸ்ரீராம் இயக்கிய படங்கள்:

மேலும், இவர் கமலை வைத்து இயக்கிய குருதிப்புனல் எனும் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து இவர் நாயகன், அலைபாயுதே, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் போன்ற பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்த மீரா, கமலஹாசன் நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய மூன்று படங்களையும் இவர் இயக்கி இருந்தார்.

பிசி ஸ்ரீராம் அளித்த பேட்டி:

இந்த மூன்று படங்களும் விமர்சனரீதியாக பாராட்டுகளை பெற்று இருந்தது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதற்கு பின் இவர் படங்களை இயக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பி சி ஸ்ரீராம் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, இதுவரை நான் இயக்குனராக வருவதற்கு சில முயற்சிகள் செய்தேன். ஆனால், நல்ல பலன் வரவில்லை. ஒளிப்பதிவு வேறு, சினிமா வேறு என்பதை நான் புரிந்து கொண்டேன்.

-விளம்பரம்-

படம் எடுக்காததற்கு காரணம்:

ஒரு சினிமாவை இயக்குவதற்கு அனைத்து பிரிவுகளையும் கையாளும் திறமை வேண்டும். அந்த திறமை எனக்கு இல்லை. அதனால் தான் நான் இயக்கிய குருதிப்புனல் உள்ளிட்ட மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எனவே, இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை. என் மனதுக்கு பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்வேன்.

ஒளிப்பதிவு குறித்து சொன்னது:

என்னிடம் கதை முழுவதையும் சொன்ன பிறகு தான் அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது குறித்து முடிவு செய்வேன் என்று தன்னுடைய திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் பிசி ஸ்ரீராம். இப்படி இவர் அளித்திருந்த பேட்டியில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement