ரெண்டு கதையும் கேட்டுட்டேன் எது பண்ணட்டும், கேள்வி கேட்ட சூர்யா, ரசிகர்கள் சொன்ன பெயர் – ஓகே சொன்ன சூர்யா.

0
1895
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

- Advertisement -

சூர்யா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 3டில் உருவாகி இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர்.

அதோடு இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு “கங்குவா” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ரசிகர்களுடன் சந்திப்பு விழாவில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது சூர்யா தான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டை கூறி இருக்கிறார்

-விளம்பரம்-

சூர்யா 43

சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் சூர்யா 43. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என்று சூர்யாவே கூறி இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. சூரரை போற்று படத்திற்கு பின் மீண்டும் சூர்யா-சுதா-ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைய இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வாடிவாசல்

இயக்குனர் வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் படம் வாடிவாசல். இந்த படத்தை ரசிகர்கள் அதிக ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. ஆனால், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. வெற்றிமாறன் விடுதலை 2-ம் பாகத்தின் ஷுட்டிங் முடிந்த பின்னர் வாடிவாசல் படத்தை தொடங்குவார் என்று சூர்யா கூறி இருக்கிறார்.

ரோலெக்ஸ்

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலெக்ஸ் என்கிற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த ரோல் இவருக்கு பெரியளவில் வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு தனி படம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருந்தார்கள். ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் ஒன்று உருவாக உள்ளது என்றும், இதற்காக லோகேஷ் அவர்கள் சூர்யாவிடம் கதை சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரும்புக்கை மாயாவி

லோகேஷ் அவர்கள் ரோலேக்ஸ் படத்தை எடுத்து முடித்த பின்னர் இரும்புக்கை மாயாவி படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக ரசிகர்கள் சந்திப்பில் சூர்யா கூறி இருக்கிறார். மேலும், ரசிகர்கள் மத்தியில் ரோலக்ஸ்-ஆ, இரும்புக்கை மாயவியா என்று கேட்க, ரசிகர்கள் பலர் இரும்புக்கை மாயாவி என்று கூச்சல் போட, அதற்கு சூர்யா ‘பண்ணிடுவோம்’ என்று கூறி இருக்கிறார். இரும்புக்கை மாயாவி திரைப்படம் லோகேஷின் கனவு படம் ஆகும். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement