அந்த படம் போது ஏன் பேசல, இதுல அவர் சாதி வெறுப்பது தான் தெரியுது – வெற்றிமாறன் கருத்தால் பேரரசு காட்டம்.

0
129
- Advertisement -

அன்னப்பூரணி திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் குவிந்த நிலையில் அந்த திரைப்படம் Netflix தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக இருப்பதாகவும் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த படம் NETFLIX தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

- Advertisement -

அன்னபூரணி படம் Netflix தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமிழ் திரையுலகில் யாரும் பெரிதாக குரல்கொடுக்கவில்லை. ஆனால், இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் அன்னபூரணி படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தெரிவித்த அவர் ‘“சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று இந்தியாவில் இருக்கும்  திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது.

இது ஓடிடி தளங்களுக்கும் பொருந்தும். ஆனால் தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை பிற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது’ என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறன் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பேரரசு ‘இதே கருத்தை கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வெற்றிமாறன் தெரிவித்திருந்தால் அவரது சினிமா பற்று உறுதியாக இருக்கும்.

-விளம்பரம்-

அன்னபூரணி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் போது அவரின் குறிப்பிட்ட சாதி வெறுப்பு தான் வெளிப்படுகிறது. திரைப்பட பட்டதாக இருங்கள் வெற்றிமாறன் என்று பேரரசு கூறியிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க அன்னபூரணி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நயன்தாரா ‘ அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement