‘பார்ட் 1ல் அம்மா செண்டிமெண்ட், பார்ட் 2வில் தங்கச்சி சென்டிமென்ட்’ எப்படி இருக்கு பிச்சைக்காரன் 2 – முழு விமர்சனம் இதோ.

0
2202
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பிச்சைக்காரன். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியடைந்தது. பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கிருக்கிறார். இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் உலகின் ஏழாவது பணக்காரராக விஜய் குருமூர்த்தி இருக்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. இதை அவருடைய கூட்டாளிகள் பறிக்க நினைக்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக சத்யா சிக்கி கொள்கிறார். இவர் தன்னுடைய தங்கையை தேடி அலையும் போது தான் இவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். பின் ஒரே நாளில் பிச்சைக்காரன் சத்யா கோடீஸ்வரனாக மாறுகிறான். ஆனால், அந்த மாற்றம் சத்யாவிற்கு பிடிக்கவில்லை.

- Advertisement -

படத்தின் கதை:

இதனால் இதிலிருந்து வெளியேற சத்யா முயற்சிக்கிறார். ஆனால், அவரால் தப்பிக்க முடியவில்லை. அதற்கு பிறகு சத்யா என்ன செய்தார்? விஜய் குரு மூர்த்தியின் சொத்துக்கள் யாருக்கு போய் சேர்ந்தது? என்பதே படத்தின் மீதி கதை. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமில்லை. முற்றிலும் புது கதை களத்துடன் விஜய் ஆண்டனி எடுத்திருக்கிறார். இயக்கம், நடிப்பு, இசை என படம் மொத்தத்தையும் விஜய் ஆண்டனியே தாங்கி நின்று இருக்கிறார்.

படத்தில் விஜய் ஆண்டனி:

இந்த படத்தில் அவருடைய மெனக்கடலுக்கு ஒரு பாராட்டை கொடுக்க வேண்டும். வழக்கம்போல் விஜய் ஆண்டனி நடிப்பில் பெரிதான வித்தியாசம் எதுவும் இல்லை. இருந்தாலும், ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். விஜய், சத்யா என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகியாக காவியா நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. மன்சூர் அலிகான், ஒய் ஜி மகேந்திரன், ஜான் விஜயன், ராதாரவி போன்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், படத்தின் கதையில் பெரிதான வித்தியாசமும், சுவாரசியமும் இல்லை. முதல் பாதியில் விஜய், சத்யா யார்? அவர்கள் பின்னணி என்ன போன்றவற்றை இயக்குனர் விஜய் ஆண்டனி சொன்னாலும் இரண்டாம் பாதியில் பணம் பற்றி சொல்லும் பாடம் சிந்திக்க வைக்கிறது. ஆனால், சொன்ன விதம்தான் சலிப்படையை வைத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கலந்து சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். படத்திற்கு ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

படத்தில் துபாய் சம்பந்தமான காட்சிகளையும், விஜய் குருமூர்த்தி சம்பந்தமான காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்திருப்பது சிறப்பாக இருக்கிறது. வசனங்கள் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது. பாடல்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை கதைக்கு சேர்ந்து இருக்கிறது. மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த கோடை விடுமுறைக்கு ஒருமுறை சென்று இந்த படத்தை பார்க்கலாம்.

நிறை:

விஜய் ஆண்டனியின் நடிப்பு

ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்

பணம் பற்றி சொல்லித் தரும் பாடம்

பிரம்மாண்ட காட்சிகள்

குறை:

ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் ரசிகர்களை பெரிதாக இருக்கவில்லை

பழைய காட்சிகளை படத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.

கதை களத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

புதுமையான கதை எதுவும் இல்லை

இறுதி அலசல்:

மொத்தத்தில் பிச்சைக்காரன் 2- குபேரன் ஆவது கடினம்

Advertisement