விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
ஜீவாவுடன் கோ படத்திலும், சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.
பியா நடிப்பில் அபியும் அனுவும் படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் வில்லை பயன்படுத்தி அரை குறை ஆடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.