பிரபல நடிகர் வீட்டில் பார்ட்டி..! குடி போதையில் கார் மீது மோதி இயக்குனர்..! புகைப்படம் உள்ளே

0
438

தெலுங்கு நடிகர்களில் முக்கிய பிரபலமான நடிகர் என் டி ஆரின் மகன் ஜூனியர் என் டி ஆர், தனது 35வது பிறந்தநாளை கடந்த ஞாயிற்று கிழமை(மே 20 ) தேதி கொண்டாடினர். இவரின் பிறந்த நாள் விழாவிற்கு தன்னுடைய திரை உலக நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுத்தவுள்ளார்.

ravindra

இந்த பார்ட்டியில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் ஜூனியர் என் டி ஆரின் நண்பரும், தெலுங்கில் வெளியான “ஜெய் லவ கூசா ” என்ற படத்தை இயக்கிய ரவீந்திரா என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

பார்ட்டி முடிந்துவிட்டு குடி போதையில் தனது சிவப்பு நிற வோல்வோ காரில் இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார் இயக்குனர் ரவீந்திரா. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் ரவீந்திரா காரை ஓட்டிச்சென்ற போது மற்றும் ஒரு காரின் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளார்.

ksravindra

இந்நிலையில் அவர் இடித்த காரில் இருந்த ஹர்மிந்தர் சிங் என்பவர் காவல் நிலையத்தில் ரவீந்திரா மீது புகார் அளித்துள்ளார். அதில் “குடிபோதையில் தனது காரை இடித்து விட்டு , மன்னிப்பும் கேட்காமல் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்” என்று புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ரவீந்திரா தலைமறைவாகியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.