வண்டியை ஓட்டியது மதுமிதா தான் – போலீசில் அளிக்கப்பட புகார். மூன்று பிரிவுகளில் வழக்கு

0
183
- Advertisement -

எதிர்நீச்சல் மதுமிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக எதிர்நீச்சல் மதுமிதா குறித்த செய்தி தான் ஹாட் டாபிக்கே. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். இருந்தாலும், தற்போது இவர் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு சின்னத்திரை சீரியல்களின் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் பகுதியில் இருக்கும் ஒரு வழி பாதையில் தன்னுடைய ஆண் நண்பருடன் மதுமிதா ராங் ரூட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த போலீஸ் வாகனத்தின் மீது மதுமிதா கார் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

மதுமிதா கார் விபத்து:

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விட்டார்கள். பின் அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மதுமிதாவையும் அவருடைய நண்பரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது மதுமிதா, ராங் ரூட்டில் வந்த எங்கள் மீது தப்பில்லை. எதிரே வந்த போலீஸ் தான் வேகமாக வந்து காரின் மீது மோதினார் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வந்து கொண்டிருக்கின்றது

மதுமிதா மீது புகார்:

இதை அடுத்து பாதிக்கப்பட்ட போலீஸ் ரவிக்குமாரின் அண்ணன் ராம்குமார் போலீசில் மதுமிதா மீது புகார் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய தம்பி ரவிக்குமார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் ஆயுதப்படையில் நேரடியாக தேர்ச்சி பெற்றார். தற்போது அவர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 21 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு என்னுடைய தம்பி பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே வந்த கார் என் தம்பியின் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

புகாரில் விபத்து குறித்து சொன்னது:

இதனால் ரவிக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக எனக்கு போன் வந்தது. இந்த தகவலை அடுத்து நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது என்னுடைய தம்பி ரவிக்குமாரின் வலது கால், தொடை, இடது கை, முட்டியில் காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தை ஏற்படுத்தியது சீரியல் நடிகை மதுமிதா என்று தெரிய வந்தது. இதனால் மதுமிதாவை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும், ரவிக்குமார் அண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஐபிசி 279, 337 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை:

பின் இது குறித்து விசாரித்த போலீஸ், விபத்து நடந்ததும் மதுமிதா மற்றும் அவரோடு வந்தவர்கள் காயமடைந்த காவல் அதிகாரி ரவிக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிக்சை முடிந்து தற்போது ரவிக்குமார் வீட்டிற்கு சென்று விட்டார். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து பிரேக் டெஸ்ட்க்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். காருக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் சீரியல் நடிகை மதுமிதாவிடமே காரை ஒப்படைத்து விட்டோம். அதே போல் சம்பவத்தன்று மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டவில்லை. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அபராத தொகையை மதுமிதா செலுத்த வாய்ப்பு இருக்கிறது. விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டு இருந்தால் அதிகபட்ச தண்டனை அவருக்கு கிடைத்திருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement