‘புல்லைங்கோ பாடல், கையில் ஆயுதம்’ – தொடர்ந்து சர்ச்சைக்குரிய ரீல்ஸ்’ – கோவை தமன்னாவை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்.

0
331
- Advertisement -

கோவை இளம் பெண் ஒருவர் பட்டாக்கத்தியுடன் வெளியிட்ட வீடியோவை பார்த்து போலீசார் அவரை தேடி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தின் வளர்ச்சி அதிகமாகி கொண்டே செல்கிறது. அதுவும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சோசியல் மீடியாவை அதிகம் பயன்படுத்தி வருகின்றார்கள்.

-விளம்பரம்-

இதனால் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற ஆப்புகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டு செல்கிறது. மேலும், இந்த சமூக வலைத்தளம் தகவலை பரிமாறு கொள்ள ஒரு நல்ல தளமாக இருந்தாலும் இதனால் பல பேர் கெட்டு மோசமான வழியில் செல்கிறார்கள்.

- Advertisement -

கோவை இளம் பெண் செய்த செயல்:

இதை பலர் நல்வழியில் பயன்படுத்தினாலும் பலர் இதை தவறான செயலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ‘பிரெண்ட்ஸ் கால் மீ தமன்னா’ என்ற பெயரில் instagram பக்கத்தில் கணக்கு ஒன்றை வைத்து இருக்கிறார்.

இளம் பெண் வீடியோவில் சொன்னது:

இதில் அவர் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகை பிடித்துக் கொண்டு பட்டாக்கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அதில் அவர், எதிரி போட நினைத்தால் காலை வெட்டுவோம் என்று வன்முறையை தூண்டும் வகையிலான பாடலை பாடி வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது.

-விளம்பரம்-

போலீஸ் நடவடிக்கை:

ஏற்கனேவே கோவையில் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டு வருகிறது. இதனால் கோவை மாநகர போலீசும் ரவுடிகளை பயங்கரமாக கண்காணித்து கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் இந்த இளம் பெண் வெளியிட்டு இருக்கும் வீடியோ வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படையை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement