என் சாப்பாட்டு மட்டும் மாதம் இத்தனை ஆயிரம் கவர்னர் மாளிகைக்குக் கொடுத்துவருகிறேன், விருந்தாளிகள் வந்தால் அதற்கு தனி – தமிழிசை.

0
405
- Advertisement -

என்னுடைய சாப்பாட்டுக்காக கவர்னர் மாளிகைக்கு மாதம் பணம் அனுப்புகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜக கட்சியில் முக்கிய நபராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இவர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து இருக்கிறார். தற்போது இவர் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார். மக்களுக்கு பணியாற்றுவதே இவருடைய ஒரே நோக்கம் என்று அடிக்கடி சொல்வார். இந்நிலையில் சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் இடம் பிரபல பத்திரிகை கேள்வி கேட்டிருந்தது .

- Advertisement -

பாஜக தலைவர் போல செயல்படுகிறீர்கள். உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

எங்களுடைய கடந்த கால அரசியல் வாழ்க்கையை வைத்து தான் அவர்கள் அப்படி சொல்கிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை சந்திப்பதோ, அவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் கிடையாது. நான் சொல்லும் கருத்துகளில் உறுதியாக இருப்பதால் அவர்கள் அப்படி விமர்சிக்கிறார்கள். நான் அரசியல் சாராமல் தான் நடந்து கொள்கிறேன். ஆளுநர் பதவி என்பதை எனக்கு ஒன்றும் சும்மா தூக்கி கொடுக்கவில்லை. திறமையாலும், பொதுவாழ்வு அனுபவத்தாலும் தான் என்னை இந்த பதவியில் அமர வைத்திருக்கிறார்கள்.

ஆளுநர் எப்படி பேசலாம், அவர்கள் எக்ஸ்ட்ரா லக்கேஜ், ஆட்டுக்கு தாடி எதற்கு? என்று பேசுவதெல்லாம் தவறான அணுகுமுறை. அதுமட்டுமில்லாமல் ஆளுநர்கள் ஏதாவது ஒரு கருத்து சொன்னால் மக்களிடம் ஓட்டு வாங்கி வந்திருந்தால் தானே இவர்களுக்கு தெரியும் என்றெல்லாம் பேசுகிறார்கள். மக்கள் வாக்களித்து தேர்வு செய்த அரசாங்கத்தின் மூலம் தான் நாங்கள் இந்த பதவிக்கு வந்திருக்கிறோம். எங்களின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், எதிர் கருத்தாக சொன்னால் மதிக்க மாட்டேன் என்று சொல்வதில் என்ன கருத்து சுதந்திரம் இருக்கிறது.

-விளம்பரம்-

ஆளுநரின் எல்லையைத் தாண்டி அரசாங்க விஷயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில்?

ராஜ் நிவாஸில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. ஆனால், அங்கு நான் ஒரே ஒரு அறையில் தான் தங்கி இருக்கிறேன். ஆளுநராக தனி விமானம் பயன்படுத்த முடியும். ஆனால், நான் ஹெலிகாப்டர் பயன்படுத்துவது கூட கிடையாது. நான் விமானத்தில் செல்லும்போது இரண்டு உதவியாளர்கள், இரண்டு காவல் அதிகாரிகள், ஒரு பணிப்பெண் என 5 பேரை அழைத்துச் செல்லலாம். ஆனால், நான் ஒரே ஒருவரை தான் அழைத்து வருகிறேன். தெலுங்கானா, பாண்டிச்சேரி என இரண்டு இடத்திலும் எனக்கு ஆகும் சாப்பாடு செலவுக்கு 15,000 ரூபாயை நான் கவர்னருக்கு கொடுத்து விடுகிறேன்.

அதுமட்டுமில்லாமல் விருந்தினர்கள் யாராவது வந்தால் அவர்களுக்காகவும் செலவையும் கொடுத்து விடுகிறேன். புதுவையில் கொரோனா காலத்தில் கவர்னர் ஆட்சி நடந்தபோது மூன்று மாதம் நான் ஒழுங்காக தூங்கவே இல்லை. அந்த அளவுக்கு மக்களுக்காக பணி செய்து இருக்கிறேன். தெலுங்கானாவிலும், ஆக்கபூர்வமான பல பணிகளை செய்திருக்கிறேன். ஆனால் , ஆளுநர் தலையிடுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். நான் தலையிட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் போது நான் ஏன் தலையிடக்கூடாது. ஆளுநர் தலையிடக்கூடாது என அரசியலமைப்பு சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement