பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ – முழு விமர்சனம் இதோ.

0
636
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. பின்அனைவரும் எதிர்பாத்திருந்த பொன்னியின் செல்வம் பாகம் 2 இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் முதல் பாகத்தில் சோழ தேசத்தின் முடிசூடா மன்னன் மற்றும் இளவரசனாக இருப்பவர் ஆதித்யகரிகாலன். இவர் சோழ தேசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல சூழ்ச்சிகள் நடப்பதை அறிந்து தன்னுடைய நண்பன் வந்திய தேவனின் மூலம் கடிதத்தை எழுதி சோழ தேசத்து இளவரசி குந்தவையிடம் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். வந்திய தேவனும் ஓலையை எடுத்துக்கொண்டு வருகிறார். இடையில் நந்தினி, பழுவேட்டையர் போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து அந்த கடிதத்தைக் குந்தவையிடம் கொடுக்கிறார்.

- Advertisement -

முதல் பாகம் கதை:

பின் குந்தவை ஒரு கடிதத்தை வந்திய தேவனிடம் கொடுத்து தன்னுடைய தம்பி அருள்மொழிவர்மனை சந்தித்து அவரை தஞ்சைக்கு அழைத்து வரவேண்டும் என்று கூறுகிறார். இதனை அடுத்து வந்திய தேவனும் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை கொடுத்த கடிதத்தை ஒப்படைகிறார். ஆனால், இலங்கையில் நடக்கும் பிரச்சனை ஒன்றில் அருள்மொழிவர்மன் தஞ்சைக்கு வர மறுக்கிறார். இதனிடையே ரவிதாசன் சூழ்ச்சியால் வந்தியதேவன், அருள்மொழிவர்மன் இருவரும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இரண்டாம் பாகம்:

ஆனால், அருள்மொழிவர்மன், வந்திய தேவன் இருவரும் கடலில் விழுந்து இறந்து விட்டதாக குந்தவைக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் அவர் மனமுடைந்து போகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த செய்தி ஆதித்ய கரிகாலனுக்கும் தெரிகிறது. இதில் இருந்து இரண்டாம் பாகம் தோற்றகிறது. மேலும், இந்த சூழ்ச்சிக்கு காரணம் நந்தினி என்று தெரிந்து அவளை கொல்ல படையோடு கிளம்பி தஞ்சை செல்கிறார் கரிகாலன். அதே நேரம் கடலில் விழுந்த அருள் மொழி வர்மன், வந்திய தேவனை ஊமை ராணி காப்பாற்றுகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கத்தில் மதுராந்தகன் தனக்கு மணிமகுடம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பல சூழ்ச்சிகளை செய்கிறார். மறுமுனையில் தன்னுடைய முன்னாள் காதலன் ஆதித்ய கரிகாலனை கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நந்தினி செய்கிறார். இதில் ஆதித்த கரிகாலனை நந்தினி கொலை செய்தாரா? மதுராந்தகன் மணிமகுடம் சூடினாரா? அருள்மொழிவர்மன் வானதி திருமணம் நடைபெற்றதா? இறுதியில் மணிமகுடம் யாருக்கு சென்றது? போன்ற பல டீவ்ட்ஸ்களே படத்தின் மீதி கதை.

படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த சியான் விக்ரம் உடைய நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கிறது. காதலியை விட்டு பிரிந்த ஏக்கம், குற்ற உணர்ச்சி, ராஜ்ஜியம் வேண்டாம் நீ மட்டும் போதுமென நந்தினி இடம் ஆதித்ய கரிகாலன் காட்டும் காதல் என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்று சொல்லலாம். ஆதித்ய கரிகாலனுக்கும், நந்தினிக்கும் இடையே வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் நந்தினியாகவும், ஊமை ராணியாகவும் முழு படத்தையும் ஐஸ்வர்யா ராய் தாங்கி நிற்கிறார். அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் வரும் ஜெயம் ரவி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். நிதானமாக யோசித்து செயல்படும் ராஜராஜ சோழன் அருண்மொழிவர்மன் ஆகவே ஜெயம் ரவி நடித்திருக்கிறார். வந்திய தேவனாக வரும் கார்த்தியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. விக்ரம் பிரபு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து திரிஷா, ரவி தாசன், கிஷோர், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சோபிதா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், லால், ரகுமான் என பலருமே தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில்அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. அதை பூர்த்தி செய்யும் வகையில் மணி ரத்தினம் கதைக்களத்தை கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், கல்கி எழுதிய கதையில் சில மாற்றங்களை மணி மணிரத்தினம் செய்து இருப்பது புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்திருக்கிறது. ஆரம்பத்தில் கதை மெதுவாக செல்வது போல் இருந்தது. ஆனால், பல இடங்களில் பார்வையாளர்களை வியப்படைய வைத்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையால் மிரட்டி இருக்கிறார். தோட்டா தரணியின் கலை, இயக்கம் பிரம்மிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாகவே பொன்னியின் செல்வன் 2 பூர்த்தி செய்து இருக்கிறது என்று சொல்லலாம்.

நிறை :

ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினி இடையே வரும் காட்சி

ஓபனிங் 15 காட்சி மிரட்டலாக உள்ளது.

நந்தினி மற்றும் கரிகாலன் காட்சி படத்தின் ஐலைட்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவியின் காட்சி சிறப்பாக உள்ளது.

படத்துடன் இசை நன்றாக கலந்திருக்கிறது.

அருமையான கலை படைப்பு.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்து இருக்கிறது.

இடைவெளி இல்லாதது சிறந்த படைப்பாக உள்ளது.

கதைக்களம் அருமையாக இருக்கிறது.

இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு

குறை:

ஆங்காங்கே சில இடங்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருக்கிறது

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் இல்லை

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் 2- மகுடம் சூடியது

Advertisement